மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 October, 2021 8:04 PM IST
Immunity develops

TB எனப்படும் காசநோய் பாதித்து, ஆறு - ஒன்பது மாதங்கள் முறையாக சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களுக்கு, கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பு வந்தால், பொதுவாக ஏற்படும் உடல் பாதிப்புகள் தான் இவர்களுக்கும் இருக்கும். ஆனால் காசநோய் சிகிச்சையின் போது கொரோனா தொற்றும் வந்தால், பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.

முதல் லாக் டவுன்

கடந்தாண்டு மார்ச் 'லாக் டவுன்' நாட்களில், அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றியதால், டி.பி., தொற்று பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. டி.பி., பாதிப்பிற்கு சிகிச்சையில் இருந்தவர்கள், குறிப்பாக, அரசு மையங்களில் மாத்திரை பெற்றவர்கள், தினசரி மருந்தை சரியாக சாப்பிடுகின்றனரா, ஊட்டச்சத்து சரியாக கிடைக்கிறதா என்று, சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்கள், காச நோய் ஒழிப்பு பணியாளர்கள், வாட்ஸ் ஆப் (Whatsapp) வாயிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடப்பதைப் போன்று கண்காணித்ததாக ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவித்தனர்.

தொற்று பாதிப்பு 

தற்போது நிலைமை மாறி விட்டது. எல்லாரும் வெளியில் வர துவங்கி விட்டோம்; கூட்டம் கூடுகிறோம். இதில் வைரஸ், பாக்டீரியா தொற்று பாதித்தவர்களும் இருக்கலாம். இதனால் டி.பி., பாதிப்பு கடந்த வாரங்களில் அதிகமாகி உள்ளது. இருமல், சளி என்றாலே, கொரோனாவாக இருக்குமோ, பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கு தெரிந்து விடப் போகிறதே என்று பயந்து விடுகின்றனர்; அதனால், தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர்.
இரண்டு வாரங்கள் தொடர்ந்து சளியுடன் இருமல் இருந்தால், அருகில் உள்ள அரசு மையங்கள், குடும்ப டாக்டரிடம் முறையாக பரிசோதனை செய்து, தேவையான மருந்து சாப்பிடுவது நல்லது.

சளி, இருமல் தானே என்று சுயமாக மருந்து சாப்பிட்டு, காசநோய் பாதிப்பாக இருந்து, அப்படியே விட்டு விட்டால், பாதித்தவருக்கும் நிலைமை தீவிரமாகும்; அவரிடம் இருந்து மற்றவர்களுக்கும் எளிதாக பரவி விடும்.
இன்றுகொரோனா பற்றி பரபரப்பாக பேசுவது போய், டி.பி., பற்றி பேச வேண்டியிருக்கும்.

டாக்டர் அருண் சம்பத்,
நுரையீரல் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
சென்னை.
93840 83062

மேலும் படிக்க

பருவ கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது தேங்காய்ப்பூ

கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து வல்லுநர் கணிப்பு

English Summary: Immunity develops according to the nature of the infection!
Published on: 11 October 2021, 08:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now