பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 March, 2022 12:35 PM IST

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் கணிசமான அளவில் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டிருப்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை உலுக்கி எடுத்தக் கொரோனா வைரஸ், பலரது உயிரைக் காவு வாங்கியது. லட்சக்கணக்கானோருக்கு பலவித உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாக்கி பழிவாங்கியது.அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில், பெரும்பாலானோருக்கு ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்று உலகம் முழுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? என்பது பற்றியும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மருத்துவர்கள் கருத்து

இதனிடையே கொரோனா பாதித்த ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மைத் தன்மை குறைந்துவிட்டதாகவும், இதனால் குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகியிருப்பதாகவும் மருத்துவ ஆய்வில் சொல்லப்பட்டு உள்ளது.இதனை உறுதி செய்யும் வகையில், சமீபகாலமாக தம்பதி சகிதமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் இந்த பிரச்சினைக்காகவே வருவதாக மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

பெங்களூரை சேர்ந்த மருத்துவர் பத்மினி பிரசாத் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் கணிசமானவர்களுக்கு ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது தம்பதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை தான்” என்றார்.டாக்டர் சஞ்சய் கூறுகையில், “கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு கொரோனா பாதிப்பால் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. அது தாம்பத்ய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.

தாம்பத்தியம் தொடர்பாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வருபவர்களில் பெரும்பாலான பெண்கள் கொரோனா தாக்கத்துக்கு பிறகு தங்களது இல்லற வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான மனநல சிகிச்சைகள் நாடு முழுவதும் அதிகரித்து இருப்பதும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க...

வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இத்தனைப் பக்கவிளைவுகள்!

சளியைத் துவம்சம் செய்யும் கற்பூர வல்லி- வீட்டில் வளர்ப்பதும் சுலபம்!

English Summary: Increased Impotence Problem With Corona - Study Information!
Published on: 14 March 2022, 12:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now