கார்த்திகைப் பட்டம் தொடங்க உள்ளதால், விவசாயிகள் உயர் ரக சின்ன வெங்காய விதைகளை வாங்கிப் பயன்படுத்துமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பருவத்தேப் பயிர் செய் (Seasonal crop)
விவசாயம் என வரும்போது, பருவத்தேப் பயிர் செய் என்பதுதான் இதன் தாரகமந்திரம். அந்த வகையில் அடுத்து வருவது கார்த்திகைப் பட்டம்.
எனவே, இந்தப் பருவத்திற்கு ஏற்ற பயிர் ரகங்களைக் கண்டறிந்து சாகுபடி செய்ய முன்வருவதே நல்லது.
சின்ன வெங்கயாம் சாகுபடி (Cultivation of small onions)
குறிப்பாகத் திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு சில நேரங்களில் விதை வெங்காயத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பல விவசாயிகள் உயர் ரக வெங்காயத்தை விதை மூலம் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்கின்றனர்.
உயர் ரக வெங்காயம் (High quality onion)
மேலும் உயர் ரக வெங்காயம் குளிர் மற்றும் பனியைத் தாங்கி வளரும். விளைச்சலும் அதிகளவில் இருக்கும். விரைவில் கார்த்திகை பட்டம் தொடங்க உள்ளது. அப்போது பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
எனவே பனி காலத்தில் உயர் ரக வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு சமயங்களில் விதைக்கும் தட்டுப்பாடு ஏற்படுவது உண்டு.
அப்போது விதைகளை வாங்க விவசாயிகள் பெரும் அலைச்சலுக்கு உள்ளாக நேர்வதுடன், அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விதை ஒரு கிலோரூ.3,000லிருந்து ரூ.15,000 வரை விலை போகிறது. வெங்காயம் விதைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் கார்த்திகை பட்ட நடவுக்கு முன் கூட்டிய நாற்றங்கால் தயார் செய்யவும் வசதியாக பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் சின்ன வெங்காயம் கோ விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு (Contact)
விதை தேவைப்படுவேர் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தை 98422 07031 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தகவல்
ராஜமிங்கம்
திட்ட ஒருங்கிணைப்பாளர்
மேலும் படிக்க...
பயிர் சாகுபடியில் நீர் சிக்கனம் சாத்தியம்தான்- கடைப்பிடிக்க எளிய டிப்ஸ்!