Health & Lifestyle

Wednesday, 01 June 2022 02:09 PM , by: R. Balakrishnan

SBI Bank

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.
மூன்றாம் நபர் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. 150சிசி மேலுள்ள இருசக்கர வாகன உபயோகிப்பாளர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதமாக உயர்கிறது.

1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்களுக்கு 6 சதவீத பிரீமியம் தொகை உயர்த்தப்பட உள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தை அந்த வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டியும் விகிதம் ஜூன் 1 இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வட்டி உயர்வு (Interest Raised)

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரு நகரங்கள், நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த பட்ச தொகையாக ரூ3000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறு நகரங்களில் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில்1,000 ரூபாய் குறைந்தபட்ச தொகையாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையிலும் 20-50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

போஸ்ட் ஆபிஸ் பயனாளர்களுக்கு இன்று வெளியானது அருமையான அறிவிப்பு!

ரேஷன் பொருள் வாங்க கைரேகை தேவையில்லை: அமைச்சர் அறிவித்த புதிய திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)