உடலுக்குப் புத்துணர்வு, மனதிற்கு மகிழ்ச்சி, வயிற்றுக்கு இதம், இவை அனைத்தையும் நமக்குக் கொடுப்பது எதுவென்றால், நாம் காலையில் அருந்தும் தேநீர்தான்.
சர்வதேச தேநீர் தினம் (International Tea Day)
ஒரு கப் தேநீர், பதட்டத்தைப் போக்க உதவுவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது என்று கூறுகிறது ஆயுர்வேதம்.
கொட்டும் மழை, வாட்டும் குளிர், வாட்டி வதைக்கும் வெயில் என எல்லாக் கால நிலைக்கும் ஏற்ற பானம் என்றால் அது தேநீர்தான். இந்தத் தேநீரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 15ம் தேதி சர்வதேச தேநீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
எப்படித் தோன்றியது தேநீர் தினம்? (What did Tea Day look like?
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கடந்த 1838ம் ஆண்டு டிசம்பர் மாதம், அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த சீனாவைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 15ம் தேதி, சர்வதேச தேயிலை தினமாகக் கொண்டாப்படுகிறது.
வரலாறு (History)
சீனாவில் உள்ள ஹுனான் பிரதேசம் தான் தேயிலையின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அங்கு 800ஆண்டுகள் பழமையானத் தேயிலைச் செடியை இருந்ததை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.சீனாவில் கீரின் டீ தான் தேசியப் பானமாக உள்ளது.
தேயிலை வாரியம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் உற்பத்தியாகும் 80சதவீதத் தேயிலைகள், இந்திய மக்களின் தேவைக்காகவேப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
50 நாடுகளில் (In 50 countries)
உலகிலேயே அதிக அளவாக தேநீர் பருகும் நாடு இந்தியா தான். இந்தியாவின் அசாம், டார்ஜிலிங் மற்றும் நீலகிரி தேயிலை, முதலிடத்தில் உள்ளன. ஆரம்பத்தில் இந்தியா மற்றும சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டத் தேயிலை வகைகள், தற்போது உலக அளவில் 50 மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்பட்டு வருகின்றன. உலக அளவில் மக்கள் தண்ணீருக்கு அடுத்ததாக அருந்தும் பானமாக தேநீர் உள்ளது.
சமத்துவ பானம்
எந்த விதமான பாகுபாடும் இல்லாத சமத்துவப் பானமாக தேநீர் உள்ளது.
தேநீர் அருந்துவதால் புத்துணர்ச்சி எற்படுவதுடன் உடல் எடைக்குறைப்பில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆண்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால் புற்று நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றுஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆயிரம் வகைத் தேநீர் (A thousand kinds of tea)
உலக அளவிலான 1000ம் மேற்பட்டத் தேநீர் வகைகள் பயன்பாட்டில் உள்ளன.
களைப்பை நீக்கி புத்துணர்ச்சி தரும் பானமாக மட்டுமில்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அத்யாவசியத் தேவைகளில் ஒன்றாகவும் தேநீர் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
எனவே உணவு பழக்கங்களில் பழக்கப்பட்ட தேநீர் தினத்தை உற்சாகத்தோடு நாமும் கொண்டாடுவோம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
பசுமை தமிழ்நாடு’ திட்டத்திற்காக தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!