இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 April, 2022 10:47 AM IST

வெல்லம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதேநேரத்தில் அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல பெரிய நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. உண்மையில் இனிப்புச்சுவை தரும் வெல்லம், சர்க்கரையை விட உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தர வல்லது.அதனால்தான் சர்க்கரைக்கு மாற்றுப் பொருளாக வெல்லத்தைப் பயன்படுத்துவது பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் வெல்லம் சாப்பிடுவது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல வகை நோய்களில் இருந்தும் விடுபட உதவுகிறது.

குறிப்பாகக் காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்காது என்பது நம்பிக்கை. இதுத் தவிர, பல வகையான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து குறைபாட்டை போக்க, வெல்லம் சாப்பிட வேண்டும். வெல்லத்தில் இடம்பெற்றுள்ள இரும்பு, ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள், உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களை கட்டுக்குள் வைக்க உதவும்.

கட்டுப்பாட்டில் எடை

செரிமானத்தை வலுப்படுத்த, காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, உங்கள் செரிமானமும் வலுவடைகிறது. அதாவது வெல்லம் சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் எந்த வித அஜீரண பிரச்சனையும் நீங்கும்.

மூட்டு வலிக்கு உதவுகிறது

தினமும் காலையில் வெல்லம் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலியால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளுக்கு நிரந்திர நிவாரணம் கிடைக்கும். காலையில் வெல்லம் சாப்பிடுவது உடல் மற்றும் எலும்பு அமைப்புகளை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் இருப்பதாக நம்பப்படுகிறது. உடலில் அமிலத்தை குறைக்கும் திறன் கொண்டது. அதாவது, காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இன்றே உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

English Summary: Is it okay to just eat jam on an empty stomach?
Published on: 09 April 2022, 10:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now