உடல் ஆரோக்கியத்தில் தொடங்கி, , ஆயுர்வேத மருத்துவம், ஆன்மீகத்தில் விளக்கேற்றப் பயன்படுவது வரை, நெய் பல விதங்களில் நமக்குப் பயன்படுகிறது. ஆரோக்கியத்திற்கு நெல் மிகவும் பயன்படும் ஒரு பொருள். பிறந்தக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை மட்டுமல்ல, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் நெய் கைகொடுக்கும்.
ஆனால் கலப்படம் செய்யப்பட்ட பசு நெய், சந்தையில் பரவலாகக் காணப்படுவதால், நல்ல தரமான நெய்யைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். ரேஞ்சிட் நெய் (Rancid ghee), அதன் நிறம் மற்றும் அமைப்பு போன்றவற்றால் பெரும்பாலும் நெய் என்ற பெயரில் விற்கப்படுகிறது.
அப்படியானால் நாம் வெண்ணைய் வாங்கி உருக்கிப் பயன்படுத்துவது சுத்தமான நெய்யாக இருக்குமா என்றால், அதிலும் 100 சதவீதம் தூய்மை என்பதை எதிர்பார்க்க இயலாது.
அதேநேரத்தில் நெய்யின் தூய்மையைக் கண்டறிய பல சோதனைகள் உள்ளன. அவற்றில் சில சோதனைகளைப் பட்டியலிடுகிறோம். இதைப் பின்பற்றி உங்கள் நெய்யின் தூய்மையைக் கண்டறிந்து கொள்ளுங்கள்.
வெப்ப சோதனை (Heating)
ஒரு பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்க வேண்டும். நெய் உடனடியாக உருகி, அடர் பழுப்பு நிறமாக மாறினால், அது தூய்மையானது. ஆனால், உருகுவதற்கு நேரம் எடுத்து, வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால்,அதில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது. எனவே அதைத் தவிர்ப்பதே நல்லது.
உள்ளங்கை சோதனை (Palm)
உங்கள் உள்ளங்கையில் ஒரு டீஸ்பூன் நெய் விடவும். அது தானே உருகினால் தூய்மையானது. அப்படி உருகாவிட்டால் கலப்படம்தான்.
அயோடின் சோதனை (Iodine)
ஒரு சிறிய அளவு உருகிய நெய்யில், இரண்டு சொட்டு அயோடின் (உப்பு) கரைசலை சேர்க்கவும். அயோடின், ஊதா நிறமாக மாறினால், அதில் ஸ்டார்ச் கலந்திருக்கிறது என்பது உண்மை. எனவே அந்த நெய் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
பாட்டில் சோதனை (Bottle)
ஒருபாட்டிலில் ஒரு டீஸ்பூன் உருகிய நெய்யை எடுத்து, அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். பாட்டிலை மூடி வேகமாக குலுக்கவும். பிறகு ஐந்து நிமிடங்களுக்கு விடவும். இப்போது பாட்டிலின் அடியில் சிவப்பு நிறம் இருந்தால், அதில் சமையல் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது.
டபுள் –பாய்லர் சோதனை(Double Boiler)
நெய்யில் தேங்காய் எண்ணெய் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, டபுள் பாய்லர் முறையைப் பயன்படுத்தி, ஒரு கண்ணாடி ஜாடியில் நெய்யை உருக்கவும். சிறிது நேரம் கண்ணாடி ஜாரை ஃபிரிட்ஜில் வைக்கவும். நெய்யும், தேங்காய் எண்ணெய்யும் தனித்தனி லேயராக இருந்தால் அதில் கலப்படம் இருப்பது உறுதி.
மேலும் படிக்க...
வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?