உடல் ஆரோக்கியம் என்று எடுத்துக்கொண்டால், முதலில் நம் நினைவுக்கு வருவதும் இதுதான். மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இவைகளைத்தான். அவைதான் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பழங்கள்.
அந்த வகையில், பழங்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி இரவில் பழங்களை சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே முடிந்த வரை இரவில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வாழைப்பழம்
இரவில் தவிர்க்க வேண்டியப் பழங்கள் எவை என்பதைப் பட்டியலிட்டுள்ளோம்.
இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது பலன் தராது. பலர் உடற்பயிற்சி செய்த பிறகு மாலையில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஜூஸாக இருந்தாலும் சரி, ஃப்ரூட் சாலட்டாக இருந்தாலும் சரி, இரவில் சாப்பிடக் கூடாது.
நீங்கள் இரவில் வாழைப்பழங்களை உட்கொண்டால், அது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும், அதனால் தூக்கம் வருவதில் சிக்கல் இருக்கலாம். அதனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்வது நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஆப்பிளை இரவில் சாப்பிடக்கூடாது. கட்டுப்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. ஆனால் இரவில் ஆப்பிள் சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக, சாப்பிட்ட பிறகு தூங்கும் போது, வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சப்போட்டா
சப்போட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகம். எனவே சப்போட்டா சாப்பிட்டால், அது உங்கள் உடலின் சர்க்கரை அளவையும், ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, இரவில் சப்போட்டா சாப்பிட வேண்டாம்.
மேலும் படிக்க...