தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் உள்ளிட்டப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. எனவேத் தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன.
எலக்ட்ரீசியன் (Electrician)
மொத்த காலியிடங்கள் : 3
கல்வித் தகுதி (Education Qualification)
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரீசியன் அல்லது வயர்மேன் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ.19,500 – 62,000
வெல்டர் (Welder)
மொத்த காலியிடங்கள்: 3
கல்வித் தகுதி (Education Qualification)
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வெல்டர் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ.19,500 – 62,000
வயது (Age Limit)
இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection)
இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 40%க்கும், ஐடிஐ மதிப்பெண்கள் 60%க்கும் கணக்கிடப்படும்.
தேர்வு இல்லை (No Exam)
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 250
கடைசித்தேதி(Deadline)
15.11.2021க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க...
பாஸ்போர்ட் கவர் புக் செய்வதருக்கு வந்தது உண்மையான பாஸ்போர்ட்- ஆன்லைன் அழிச்சாட்டியம்!
பட்டாசுக்கு பலியான தந்தை- மகன்- இருசக்கர வாகனத்தில் விபத்து!