இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 April, 2019 7:50 PM IST

சூரியன் உதிப்பதற்கும் முன்னபே வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது நமது கலை மற்றும் பண்பாடு ஆகும். வாசலில் கோலம் போடுவதால் வீட்டிற்கு ஓர் அழகு சேர்கிறது. பெண்கள் கோலம் போடுவதால் அவர்களின் பண்பு நலனும், பொறுமைத்திறனும், வெளிப்படுகிறது. வீட்டிற்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல் அளித்து அவர்களை நன்கு  கவனித்துக்கொள்வதால் அவளின் பண்பு வெளிப்படுகிறது. எத்தனை பொறுமை கொண்டவள் என்பது வெளிப்படுகிறது. அதைப்போலவே வாசலில் கோலம் போடுவதால் அவள் திறமை வெளிப்படுகிறது.  கோலம் போட்ட வீட்டை பார்த்தாலே தனி ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. அருசி மாவில் கோலம் போடுவதால் அது எறும்புகளுக்கு உணவாக மாறுகிறது. பண்டிகை நாட்களில் பலமணிநேரம் எடுத்து அழகாக வண்ண கோலங்கள் போடுவர்.

மேலும் கோலம் போடுவதால் பெண்களுக்கு நல்ல உடல் பயிற்சி ஏற்படுகிறது. குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் நரம்பு பலம் பெறுகிறது, இடுப்பு எலும்புக்கு நல்ல வலிமை தருகிறது. மேலும் கோலம் போடுவதால் நியாபகத் திறன் அதிகரிக்கும். அழகான கோலம் போட்டிருக்கும் வீட்டை கோவில் போல் நினைப்பார்கள். வீட்டிற்கு நன்மை சேரும், மங்களம் உண்டாகும் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவாள் என்று நம் வீட்டு  பெரியவர்கள் கூறுவார்கள். வீட்டில் மங்களகரமான நிகழ்வு நடக்கையில் கோலத்தை வைத்தே விருந்தினரை அசத்தி விடுவார்கள். மேலும் கோலத்தின் நடுவில் மஞ்சள் அல்லது சாணம்  பிடித்து அதன் மேல் பூசணி பூ வைப்பதால் கோலத்திற்கு இன்னும் அழகு சேர்க்கும்.

நமது பாரம்பரியமான கோலம் போடும் கலையை இன்று பெண்கள் சிறிது சிறிதாக மறந்து விட்டார்கள். இன்றையா பெண்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நிலையில் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வைத்துக்கொள்கின்றன. மேலும் விழா நாட்களில்  கோலம் போடு அச்சுகள் கொண்டு வாசலை அலங்கரித்து கொள்கின்றன. இத்தகைய வேளையில் பெண்களுக்கு குனிந்து நிமிர்வதற்கான சூழலே ஏற்படுவதில்லை. நவீனம் நவீனம் என்று இன்று நம் பெண்கள் பலவிதமான பாரம்பரிய  கலைகளை மறந்து வருகின்றன. கோலம் நமது பண்டைய கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு மங்களகரமான  நிகழ்வு. வீட்டில் நன்மை பெறுக வாசலில் அழகான கோலம் இடுவது மிகச்சிறந்தது. மேலும் அந்த வீட்டின் பெண்ணின் குடும்பத்திறனையும் வெளிப்படுத்துகிறது. நம் கலாச்சாரத்தை மறக்காமல் இத்தனை அழகான கலையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும்.

English Summary: kolam a south Indian culture
Published on: 09 April 2019, 07:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now