Health & Lifestyle

Thursday, 02 December 2021 11:07 AM , by: Elavarse Sivakumar

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறையில் சிந்திக்கவோ, சிரிக்கவோ ஏது நேரம். ஏன் பலநேரங்களில் சிரிப்பதை நாம் மறந்தே விடுகிறோம். இதனால்தான், மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகளைச் சந்திக்கிறோம்.

ஆனால் சிரிப்பு ஒன்று மட்டுமே, பல உடல் மற்றும் மன ரீதியானப் பிரச்சனைகளுக்கு மருந்தாய் விளங்குகிறது. சரி, அப்படி சிரிப்பதால் என்னென்ன நன்மைக் கிடைக்கிறது நமக்கு? தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சிரிப்பின் வகைகள் (Types of laughter)

அசட்டு சிரிப்பு
ஆணவ சிரிப்பு
ஏளனச் சிரிப்பு
சாகச சிரிப்பு
நையாண்டி சிரிப்பு
புன் சிரிப்பு
மழலை சிரிப்பு
நகைச்சுவை சிரிப்பு
தெய்வீகச் சிரிப்பு
காதல் சிரிப்பு
வில்லங்க சிரிப்பு
ஏழையின் சிரிப்பு

நன்மைகள் (Benefits)

  • ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

  • உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகிறது.

  • இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்குச் சிரிப்பு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது.

  • சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு நன்கு உட்சென்று உடலிற்குப் புத்துணர்வைத் தரும்.

  • சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.

  • ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.

  • சிந்தனை செயல் அதிகரிக்கச் சிரிப்பே சிறந்தது.

  • சிரிக்கும் போது முகத்தின் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகை அதிகரிக்கக் காரணமாகிறது.

  • நீண்ட சிரிப்பு, உடலில் உள்ள அதிகக் கலோரிகளை எரிக்கப் பயன்படுகிறது.

  • சிரிக்கும் பொழுது உடல் வலியைக் குறைக்கும் ஹார்மோன் உற்பத்தியாகிறது.

  • ஒருவர் சிரிக்கும் பொழுது உடலில் 300 தசைகள் அசைகின்றன.

நாளுக்கு 400 முறை (400 times a day)

ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 முறை சிரிக்கும்போது,பெரியவர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள்.

தியானம் செய்வதால் கிடைக்கும் சக்தியை விட, சிரிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைகின்றன. அதனால்தான், சிரிக்கும் பயிற்சியைக் குறிப்பிட்ட சில நேரத்திற்குப் பலரும் செய்து வருகின்றனர். எனவே நாமும் இனியாவது சிரித்து வாழ்வோம். 

மேலும் படிக்க...

அந்த விஷயத்திற்கு ஏற்ற இதமானப் பானங்கள்!

இதயப் பாதிப்புகளைக் குறைக்க இரவு 10 மணி தூக்கமே சிறந்தது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)