Health & Lifestyle

Saturday, 08 June 2019 11:37 AM

சர்க்கரை நம் தினசரி வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் சர்க்கரை சேர்த்த டீ, காபி அருந்தினால் தான் நாளின் துவக்கம் சுறுசுறுப்பாக அமையும் என்று நம்மில் பலரும் நம்புகிறோம். ஆனால் நாம் சாப்பிடும் இந்த சர்க்கரையில் கலந்துள்ள இரசாயனம், கெட்ட கொலஸ்ட்ரால் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நாம் நினைத்ததுகூட இல்லை.

இதற்கு தீர்வாக இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஒரு அற்புதமான மூலிகை செடிதான் இந்த இனிப்பு துளசி. இதனை ஆங்கிலத்தில் ஸ்டீவியா (Stevia)  என்பர். இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) என்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புத் தன்மைக்கு முக்கியக் காரணங்களாகும். இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு சிறந்த நன்மைகள் அளிக்கின்றன.

ஜப்பான், சீனா, கனடா,கொரிய, தயிலன்ட், நாட்டின் மக்கள் அனைவரும் சர்க்கரைக்கு பதிலாக இந்த சர்க்கரை துளசியை  பயன்படுத்துகின்றன. பல வருடங்களுக்கு முன்பே  இந்த செடி நம் நாட்டிற்கு வந்திருந்தாலும் இதன் பயனும், நம்மையும் இப்பொழுதான் மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இயற்கையாகவே கரும்பை விட 100 மடங்கு இனிப்பு தன்மை கொண்டுள்ளது. இதில் "0" கேலரிஸ் உள்ளது. கார்போஹைட்ரெட்ஸ், சோடியம், மெக்னீசியம், கால்சியம், பொஸ்போருஸ், வைட்டமின், ஜின்க், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

`சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில், சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்றாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ள இந்த சீனித் துளசி, சர்க்கரை மற்றும் வெல்லத்தை விட அதிக இனிப்புத் தன்மை கொண்டது. மேலும் இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

ஸ்டீவியா அளிக்கும் சிறந்த நன்மைகள்

* இது உடலில் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்துகிறது.

* இரத்த அழுத்தத்தை குறைகிறது.

* இதயம் சம்பந்தப்ட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது.

* கெட்ட  கொழுப்புகள் அதிகரிப்பதை தடுத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

* நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இது சிறந்த முறையில் மருந்தாக அமைகிறது.

* இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற தன்மை  உடலில் புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது.  உடலில்  ஏற்படும் பாக்டீரியாவை அளிக்கிறது.

* ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.

* வயிற்றுப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணி.

இனிப்பு பொருள்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த சர்க்கரை துளசியை (Stevia) பயன்படுத்துவது சிறந்தது. டீ, காபி, மற்றும் மேலும் பல இனிப்பு பொருள்களில் சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.

மாடித்தோட்ட தொட்டிகளிலும், மண் தரையிலும் எளிதாக வளர்க்கலாம். மண் நன்கு ஈரமாகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றலாம். 40 டிகிரி வெப்பம் உள்ள இடத்திலும் சீனித் துளசியை வளர்க்க முடியும். செடிகளின் இலைகள் சற்று திடமாக வளரத் தொடங்கியதும் பறித்து பயன்படுத்தலாம். வீட்டில் 2, 3 செடிகள் இருந்தாலே போதும் வருடம் முழுவதிற்குமான சர்க்கரை இதில் இருந்து கிடைத்து விடும்.

k.sakthipriya
krishi jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)