உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, நடைபயிற்சியே போதும். தொப்பை குறைக்க, நடைபயிற்சி ஒன்றே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில், நடைபயிற்சி உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும். அதுமட்டுமல்ல, நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
அவ்வாறு, தினமும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. காலையிலும், இரவு உணவுக்குப் பிறகும் அடிக்கடி நடைபயிற்சி செய்வது நல்லது.
ஆபத்துகள்
சாதாரண நடைப்பயிற்சிக்குப் பதிலாக வேகமாக நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 8 முதல் 10 மணி நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு கரோனரி தமனி நோய், மூன்று நாள நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் செயல்பாடு குறைவதால் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் அதிகரிக்கும். ஆகையால், தினமும் உடலில் இயக்கம் இருப்பதையும், உடல் ஆக்டிவ்வாக இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆய்வில் தகவல்
மூன்றரை மாதங்களுக்கு, உணவை மாற்றாமல், தினமும் சுமார் ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்தால் பெண்கள் தங்கள் தொப்பையை 20 சதவிகிதம் குறைக்க முடியும் என கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆகையால், அனைவரும் அதிக அளவில் நடக்க முயற்சிப்பது நல்லதாகும். ஏனென்றால் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
எவ்வளவு நடக்க வேண்டும்?
நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கவும், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் விரும்பினால், நாம் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் (ஸ்டெப்ஸ்) நடக்க வேண்டும். தினமும் இப்படி செய்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பல ஆச்சரியமான பலன்கள் கிடைக்கும். அதன் பலன் சில வாரங்களில் தெரியும்.
நடைபயிற்சியின் நன்மைகள்
நடைபயிற்சி உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது தவிர இது நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!