Health & Lifestyle

Wednesday, 02 March 2022 07:56 AM , by: R. Balakrishnan

Benefits of Wood Apple

எல்லோரும் எதிர்ப்புசக்தி தரும் உணவுகளை தேடித்தேடி உண்கிறோம். பழ வகைகளில் ஆயுர்வேத மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விளாம் மரத்தின் வேர், இலை, காய், பிசின், பழம் போன்றவை மருத்துவக் குணங்கள் நிறைந்தவையே. இதன் ஓட்டை கூட மருத்துவகுணங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பலமான ஓட்டுடன் இருக்கும் இவை அதிகபடியான மருத்துவகுணங்களை கொண்டிருந்தாலும் உட்புறம் இருக்கும் சதையானது ஓட்டில் ஒட்டிய நிலையில் இருக்கும்.

பழமாக கனிந்ததும் அவை ஓட்டை விட்டு விலகி தனியாக இருக்கும். சற்று புளிப்பும் இனிப்பும் கலந்த இந்த பழம் பித்தப்பை பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது.

விளாம்பழத்தின் பயன்கள் (Benefits of Wood Apple)

  • பல வியாதிகளைக் குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.
  • இதில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் உள்ளது.
  • ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.
  • நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • எலும்புகளுக்கு பலம் ஏற்படும்.
  • ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.
  • வயதானவர்கள் இதனை உண்டால், அவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோ பொரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப் பார்க்காது.
  • பற்கள் கெட்டிப்படும்.
  • இரத்தத்தை விருத்தியடையச் செய்யும்.
  • சீதபேதி குணமடையும்.
  • இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.
  • பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.
  • தலைவலி, கண் பார்வை மங்கல், மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை-கால்களில் அதிக வியர்வை இவைகளை சரிப்படுத்தும்.

மேலும் படிக்க

விரைவான முதுமையைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்!

இரத்த விருத்திக்கு கொள்ளு தான் அருமையான உணவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)