Health & Lifestyle

Monday, 25 April 2022 10:45 PM , by: Elavarse Sivakumar

ஊறுகாய் மட்டுமல்ல, முக்கனிகளுள் ஒன்றான மாம்பழத்தின் சுவையும், அதை நினைக்கும்போது நம் நாவைச் சுவைக்கத் தூண்டும். அத்தகைய மாம்பழங்கள் சுவைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அத்தனை நன்மை பயக்கின்றன. இது அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்.மாம்பழத்தை உட்கொள்வதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.மாம்பழத்தில் புரதங்களை உடைக்க வேலை செய்யும் பல நொதிகள் உள்ளன.

ஆக மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும். ஆகையால் கோடையில் அனைவரும் மாம்பழத்தை உட்கொள்ள வேண்டும்.

உடல் எடை (body weight)

மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு, அதிகமாக பசி எடுப்பதில்லை. இதன் காரணமாக அடிக்கடி தேவையற்ற திண்பண்டங்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. ஆகையால் உடல் பருமனைக் குறைக்க மாம்பழம் ஒரு நல்ல மருந்தாக உதவும்.

ஞாபக சக்தி (memory power)

மாம்பழத்தில் உள்ள குளுட்டமைன் அமிலம் என்ற தனிமம் ஞாபக சக்தியை அதிகரிப்பதில் ஊக்கியாக செயல்படுகிறது. மேலும், இதனால், இரத்த அணுக்களும் நன்றாக செயல்படுகின்றன. ஆகையால் மாம்பழம் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பு பெறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி (immunity)

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மாம்பழத்தை உட்கொள்வதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.

சருமப் பாதுகாப்பு (Skin care)

மாம்பழக் கூழ் கொண்டு ஒரு பேக் போடுவதாலும், அல்லது, அதைக்கொண்டு முகத்தை தேய்ப்பதாலும், முகபொலிவு மேம்படுகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

செரிமானம் (Digestion)

மாம்பழத்தில் புரதங்களை உடைக்க வேலை செய்யும் பல நொதிகள் இருப்பதால், உணவு விரைவாக செரிக்கப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், உடலில் உள்ள காரத் தனிமங்களை சமநிலையில் வைக்கிறது.

புற்றுநோய்

மாம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருங்குடல் புற்றுநோய், லுகேமியா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க...

கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!

வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)