Health & Lifestyle

Tuesday, 23 April 2019 03:16 PM

பேரிச்சம்பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும்,சத்துக்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னிசியும், இரும்பு சத்து, நார் சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன.

பேரிச்சம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:

  • பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புத்தி கூர்மை, அறிவாற்றல், அதிகரிக்கும். முதியவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மந்தமானது குறைந்து புத்தி சுறுசுறுப்பாகும்.

  • இதில் உள்ள பொட்டாசியம் கேட்ட கொழுப்புக்கள் ஏற்படுவதை தடுத்து இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய்யை தடுக்கிறது. இதனால் ஸ்ட்ரோக் மாற்று மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் குறைகிறது.

  • இரத்த சோகை , பேரிச்சம்பழத்தில் இரும்பு மற்றும், காப்பெற் சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை தடுக்கிறது.

  • இதில் உள்ள சர்க்கரை, புரதம், வைட்டமின், ஆகியவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. உடல் மெலிதாக இருப்பவர்கள் பேரிச்சம் பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

  • பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து உங்கல் செரிமானத்தை ஆரோக்கியமாக்குகிறது.  சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் ஆகியவை சீராகிறது.

  • பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினசரி பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலு பெரும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)