மிளகில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும், தயாமின், ரிபோபிலவின், ரியாசின் போன்றவையும் அடங்கியுள்ளன.
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, குடல் வாயு உருவாவதை தடுக்க உதவுகிறது.
சளித்தொல்லை
அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து, பொடித்து, அதனை தினம் அரை டிஸ்பூன் முன்று வேளைகளிலும் சாப்பிட்டு வர குணமாகும்.
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகள் முற்றிலும் குணமாகும்.
நச்சுக்களை வெளியேற்றும்
உடலிலிருந்து நச்சுகளை அகற்றும், வியர்வை மற்றும் சிறுநீரகத்தை மேம்படுத்துகிறது.
மிளகு தண்ணீரை தினமும் காலையிலேயே பருகி வந்தால் சிறுநீரகத்தின் 4% சிறுநீர் கொழுப்புடன் தயாரிக்கப்படுவதால் யூரிக் அமிலம், யூரியா, அதிகப்படியான தண்ணீர் மற்றும் கொழுப்பு நீக்க முடியும்.
தலைவலி மற்றும் தொண்டை வலி
மிளகினை சுட்டு, அதன் புகையினை இழுத்தால் தலைவலி குணமடையும்.
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும் மற்றும் மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தீராத தலைவலியும் குணமாகும்.
தொண்டை வலிக்கு மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.
ஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய்களில் இருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும்.
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் பறந்துவிடும்.
பல்வலி, வாய் துர்நாற்றம்
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி மற்றும் சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
மிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, ஆறவைத்து பின்பு அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.