Health & Lifestyle

Wednesday, 23 January 2019 03:38 PM

உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.

உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள்.  ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சரியான அளவில் அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை மறதி நோயை பறந்தோடச் செய்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மறதி நோய்க்கான காரணமும் தீர்வும் என்ற தலைப்பில் நடந்த ஆய்வு முடிவில் வெளியாகி உள்ள தகவல்கள்: உணவில் ருசி மற்றும் வாசனையை அதிகரிக்கவும், எளிதில் செரிமானமாவதற்கும் சேர்க்கப்படும் தாவரப் பொருளான பட்டை மறதி நோய்க்கும் மருந்தாகிறது.

பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பக்டீரியாவை தாக்கி அழிக்கிறது.

இந்த பக்டீரியாக்கள் மூளையில் உள்ள நியூரான்களை அதிக அளவிலும் விரைவிலும் அழிக்கும் திறன் கொண்டவை. இவற்றை கட்டுப்படுத்தி அழிப்பதால் நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும்.

மறதி நோய் உள்ளவர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும்கூட பட்டையை தேவையான அளவு உட்கொள்ளலாம். அதே நேரத்தில் நாள் ஒன்றுக்கு 10 கிராம் என்ற அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

 

இது உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது. முக்கியமாக தாய்மையுற்ற பெண்களின் எடையை.

பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. பட்டையும் தேனும் கலந்து சாப்பிட்டால், இது தற்காப்புத் தன்மையை அதிகரிக்குமாம். ஆயுளைக் கூட்டுமாம். உடல் சோர்வை விரட்டுமாம்.

பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நமைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக் கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம்.

சிறு நீர் உபாதை, சிறு நீர்க் குழாயில் பாக்டீரியா தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது.

பரு வந்தாலும், பட்டையை அரைத்துப் பூசினால் பரு போயேவிடும். பட்டை மற்றும் தேன் கலந்து தினம் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும். தலைவலிக்கும் பட்டையை அரைத்து தடவலாம்.

பட்டை பொடி+ தேன்+ சூடான ஆலிவ் எண்ணெய் கலந்து வழுக்கை விழுந்த தலையில் தடவி 15 நிமிடம் வைத்திருந்தால் முடி முளைக்கும் என சொல்லப்படுகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)