Health & Lifestyle

Wednesday, 23 January 2019 06:02 PM

நமது முன்னோர்களின் காலத்தில் இருந்து ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த காய்கறி வகைகளில் ஒன்றாக புடலங்காய் உள்ளது.

இந்த புடலங்காயில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

எனவே புடலங்காயில் நன்கு முற்றிய புடலங்காய் சாப்பிடுவதை தவிர்த்து, பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி அடைந்த புடலங்காயை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்

நமக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்கி, நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணமாக்குவதுடன், நல்ல பசியையும் தூண்டச் செய்கிறது.

புடலங்காயை தினமும் நாம் உணவில் சேர்த்து வந்தால், குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் போன்ற பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடச் செய்கிறது.

புடலங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், மலசிக்கல் பிரச்சனைகள் வராது.

மூல நோய் உள்ளவர்கள், தினமும் புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது நரம்புகளுக்கு புத்துணர்வுகளை அளித்து, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தி, கருப்பைக் கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகளியும் சரி செய்கிறது. மேலும் இது கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.

புடலங்காயில் நீர்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றி, வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. 

K.Sakthipriya
Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)