Health & Lifestyle

Thursday, 24 January 2019 02:06 PM
  • சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் (நார்சத்து) அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும், பைபர் கிழங்கு விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும்.
  • அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது.
  • உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருவதுடன், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
  • சர்க்கரை வள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தவிர்த்து, இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • சர்க்கரை வள்ளிக் கிழங்கு அதிக விட்டமின்களை கொண்டுள்ளதால், இளமையில் ஏற்படும் முதுமை தோற்றத்தை தடுக்கிறது, மேலும் சுவாசப் பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
  • இதில் இரும்பும், மாங்கனீஸும் அதிக அளவில் இருப்பதால் நரம்புகள், இதயம், ரத்தநாளம் ஆகியவை சீராக செயல்பட இது உதவுகிறது.
  • இது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை குறைக்கும் மிக சிறந்த தாதுப்பொருள்.
  • இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் பிளட் பிரஷரை குறைக்க உதவும் மிக முக்கிய மினரல்.
  • அதனால் சர்க்கரைவள்ளி கிழங்கை உண்பது ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், இரண்டுக்கும் அதுவே அருமருந்து.

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)