தீக்காயம்
மனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறையும். காயம் சீக்கிரம் ஆறுவதுடன் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதை தடுக்கும்.
வயிற்றுப்போக்கு
உடல் உஷ்ண நிலை திடீரென்று அதிகரிப்பதாலும், வயிற்றிற்கு ஒவ்வாத சில வகை உணவுகளை உண்பதாலும், கிருமி நிறைந்த உணவு, நீர் போன்றவற்றை அருந்துவதாலும் சிலருக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சாற்றை தீராத வயிற்று போக்கு சீதபேதி பாதிப்பு கொண்டவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
சரும நலம்
மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் படி மருதாணி இலைகளை நன்கு அரைத்து அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் தோலில் பூசி வந்த போது தோலில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி, தோலில் மிருதுத்தன்மையை அதிகரித்து ஒருவருக்கு இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது என கண்டறியபட்டுள்ளது. சொறி சிரங்கு போன்ற தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணமாக மருதாணி இலை சாறு மற்றும் எண்ணெய் இருக்கிறது.
கல்லீரல்
நாம் உண்கின்ற உணவில் இருக்கும் நச்சு தன்மைகளை நீக்கி, அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்களை உடல் பெற்றுக்கொள்ள பேருதவி புரிவது கல்லீரல் ஆகும். கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்ற கொஞ்சம் மருதாணி இலைகளை, தூய்மையான தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற அனைத்து உறுப்புகளில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறி இவ்வுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
ரத்த அழுத்தம்
மருதாணி இலைகள் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தும் சமசீரான அளவில் இருக்க செய்கிறது. இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு உண்டு. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள் மருதாணி இலை தண்ணீரை பருகி வருவது நல்லது.
தலைவலி
தலை என்பது உடலின் பிரதானமான உறுப்பு. தலையில் எந்த வகை பாதிப்பு ஏற்பட்டாலும் அது நம்மை வேறு எதிலும் கவனம் கொள்ளமுடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. சிலருக்கு ஜுரம் போன்றவற்றால் தலைவலி ஏற்படுகிறது. மைக்ரேய்ன் எனப்படும் ஒற்றை தலைவலியும் உண்டாகிறது. மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவி வந்தால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சனைகளும் தீரும்
தலைமுடி
தலைமுடி என்பது அனைவருக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தலையில் பொடுகு, அடிக்கடி அதிகளவில் முடி உதிர்வது, இளநரை, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளும்
தீர சுத்தமான தேங்காய் எண்ணையில் தேவையான அளவு மருதாணி இலைகளை போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை தலைக்கு தடவி வர மேற்கண்ட அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் தீரும்.
பெண்கள்
பெண்கள் அடிக்கடி தங்களின் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து இட்டுக்கொள்வதால் கைகளில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கி கைகள் மிருதுவாகும். உடல் அதிகம் உஷ்ணமாவதை தடுக்கும். மன அழுத்தங்களை குறைக்கும். மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகசுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
தூக்கமின்மை
நரம்புகள் பாதிப்பு மற்றும் மன அழுத்தங்கள் அதிகரிப்பதால் சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை உண்டாகி பல விதங்களில் அவர்களின் உடல், மன ஆற்றலை குறைகிறது. மருதாணி இலையில் இருந்து பெறப்பட்ட மருதாணி எண்ணையை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து, நரம்புகளை குளிர்ச்சியாக்கி தூக்கமின்மை பிரச்சனை நீங்குகிறது.
வீக்கம்
உடலில் சில பாகங்களில் சமயத்தில் சுளுக்கு ஏற்பட்டு அந்த இடம் வீங்கி விடுகிறது. வாதம் சம்பந்தமான பாதிப்புகள் கொண்டவர்களுக்கும் உடலின் மூட்டு பகுதிகளில் விறைப்பும், வீக்கமும் ஏற்படுகின்றன. மருதாணி இலைகளில் இருந்து பெறப்படும் எண்ணையை வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி வருபவர்களுக்கு வீக்கங்கள் விரைவில் வற்றும்.