Health & Lifestyle

Saturday, 17 July 2021 02:27 PM , by: T. Vigneshwaran

Millet

சிறுதானியத்தில் ஒன்று கம்பு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உலகிலே மிகவும் சிறப்பு வாய்ந்த உணவுகளில் ஒன்று கம்பு. தொடர்ந்து கம்பு உணவில் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

கம்பு ஊட்டச்சத்துக்களின் மையம் என்றே சொல்லலாம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு என்று பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

வேறு எந்த உணவை விடவும் கம்பு தானியத்தில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இவை உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை சீராக்குகிறது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் காணப்படுகிறது. புரதச்சத்து இந்த அளவு வேறு எந்த தானியத்திலும் இல்லை. 

கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. தொடர்ந்து கம்பு உணவை உணவில் எடுத்துக்கொண்டால், ரத்த சோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை தீரும். 

நமது மாறிப்போன உணவு வழக்கம் காரணமாக உடல் சூடு பிரச்சனை அதிகம் ஏற்படக்கூடும். தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்தால் உடல் சூடு தணியும்.  உடல் சூட்டைத் தணிக்க,  இந்த கோடைக் காலத்தில் கம்பங்கூழுக்கு மிகையான உணவு வேறு எதுவுமே கிடையாது. 

கம்பங்கூழில் அதிகம் நார்ச்சத்தும், குறைந்த அளவு கொழுப்பு சத்தும் அதிகமாவே நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். எனவே  செலவில்லாமல் எடையினை குறைக்க விரும்புவர்கள் கம்பு உணவை தினமும் ஒரு வேளையாவது உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம்.

கம்பில் பொட்டாசியமும், மெக்னீசியமும் அதிக அளவில் நிறைந்துள்ளன. தினசரி உணவில் கம்பு எடுத்துக்கொண்டால், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 

மேலும் படிக்க:

ராகியில் இருக்கும் சிறப்பு நன்மைகள்: இனி ராகியை தவிர்க்கவேண்டாம்!!

காளான் விரும்பிகள் சாப்பிடுவதற்கு முன் தெரிந்துக் கொள்ள வேண்டிய விளைவுகள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)