கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா அலை (Corona wave)
இந்தியாவை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, 2-வது அலை, 3-அலை என அடுத்தடுத்து அலைகளாக மாறி வருகிறுது. தற்போது மக்களைப் பந்தாடிவரும் கொரோனா 2-வது அலை, குறிப்பாக டெல்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
2 வகைத் தடுப்பூசி (2 types of vaccine)
இதையடுத்து, கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் என 2 வகையானத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மெத்தனப்போக்கு (Slowness)
தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு, கடந்த மார்ச் மாதமே அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டாலும், ஆரம்பத்தில் தடுப்பூசித் தொடர்பாக வெளியானத் தவறான தகவல்கள் மக்களை வெகுவாகக் குழப்பம் அடையச் செய்தன. இதனால், மக்கள் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில், மெத்தனத்தைக் கடைப்பிடித்தனர்.
ஆனால் நோயின் தீவிரம் அதிகரித்துவிட்ட நிலையில், கடந்த 2 மாதங்களாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, ஒரேநேரத்தில் குவியத் தொடங்கினார். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாஸ் வழங்கப்பட்டு, பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசிப் போடப்படுகிறது.
தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு (Shortage of vaccine)
இதன் காரணமாக, தடுப்பூசிக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கோவேக்சின் (Covaxin)
கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும்.
கோவிஷீல்டு (Covishield)
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம்.
மார்க்கெட்டில் 2 வகையானத் தடுப்பூசிகள் சந்தைக்கு வந்துள்ள நிலையில், இதில் எது சிறந்தது என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது.
தடுப்பூசியில் முதல் டோஸிற்கும், 2-வது டோஸிற்கும் இடையே குறிப்பிட்டக் கால இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றிப் போட்டால் (If changed)
அதேநேரத்தில் முதல் டோஸ் ஊசியைப் போட்டவர்கள், 2-வது டோஸிற்கும் அதேத் தடுப்பூசி கிடைக்காமல், வேறு போடும் நிலையும் உருவாகிறது. அவ்வாறு மாற்றிப் போடுவது நல்லதல்ல என்றத் தகவல்களும் உலா வந்தன.
ஐசிஎம்ஆர் ஆய்வு (ICMR study)
இந்தநிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவதுப் பாதுகாப்பானது மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
இருவேறுத் தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. சில இடங்களில் தடுப்பூசி மாற்றிபோடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...