இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் உள்ளார்.
முதல்வர்கள் பட்டியல்
இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் குறித்தக் கருத்துக்கணிப்பை இந்தியா டுடே' பத்திரிகை நடத்தியது. இதில் தற்போது முதல்வர்களாக இருப்பவர்களில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா 63 சதவீதத்துடன் 2வது இடத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் 61 சதவீதத்துடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
பிஜேபிக்கு ஆதரவு
இதேபோல், தற்போது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 286 இடங்கள் கிடைக்கும் என்று இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 146 இடங்களிலும், மற்ற கட்சிகள் 111 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமராக மோடி
மேலும், லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு, 53 சதவீதம் பேர் மோடி தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு 9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!