குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்தையும், தன் ருசியால் கொள்ளை கொண்டிருக்கும் சிறந்த கடலை கொண்டைக்கடலை.
இதை சாப்பிடுவதற்கு எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அதே அளவு இது சத்தானது. இதில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதய ஆரோக்கியம்
கொண்டைக்கடலை பல விதங்களில் சமைத்து உண்ணப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள புரதங்கள் தசைகளை உருவாக்கவும், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதே நேரத்தில், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. கொண்டைக்கடலையில் மறைந்திருக்கும் மற்ற நல்ல குணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அஜீரணம்
கொண்டைக்கடலையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது மலச்சிக்கல், அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற குடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
சூட்டைத் தணிக்கும்
தாமிரம் மற்றும் மாங்கனீசு கொண்டைக்கடலையில் காணப்படுகின்றன. இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதனை உண்பதால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். கொண்டைக்கடலை இரும்பின் சிறந்த மூலமாகும். இதனை உட்கொள்வதால் இரத்த சோகை பிரச்சனை இருக்காது.
பசியைக் கட்டுப்படுத்தும்
கொண்டைக்கடலை பசியைக் கட்டுப்படுத்த உதகிறது. இதை உட்கொண்டு நீண்ட நேரம் ஆன பிறகும் ஆற்றல் அளவு அதிகமாக இருக்கும். கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கூந்தல் ஆரோக்கியம்
கொண்டைக்கடலையில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது முடி உதிர்தல் பிரச்சனையிலும் உதவுகிறது. அதே போல் கொண்டைக்கடலையில் வைட்டமின்கள்-ஏ, பி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இது உச்சந்தலையையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்னை
கொண்டைக்கடலையில் ஆண்டி ஆக்சிடண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் எதிர்மறை அறிகுறிகளை இயற்கையாகவே குறைக்க உதவுகிறது.உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க கொண்டைக்கடலை உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறைகிறது. கொண்டைக்கடலை உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகின்றது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி
கொண்டைக்கடலையில் பீடா கரோட்டின் எனப்படும் ஒரு தனிமம் நிறைந்துள்ளது. இது கண்களுக்கு நன்மை பயக்கும். கொண்டைக்கடலையை உட்கொள்வது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பல நோய்களுடன், வானிலை மாற்றத்தால் வரும் பல உடல் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க...