பூச்சிகளிடமிருந்து உங்களைப் பாதுகொசுக்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவை கடித்தால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த கொடியகாத்துக் கொள்ளவும், உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்கவும் சில இயற்கை வழிகள் இங்கே உள்ளன. கொசுக்கள் பெருகும் இடமாக இருப்பதால், உங்கள் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகில் குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்குவதை அனுமதிக்கக்கூடாது. வெங்காயம், கடுகு எண்ணெய், சாம்பிராணி மட்டும் கொண்டு நீங்களே வீட்டில் ரசாயனமில்லாத இயற்கையான கொசு விரட்டி தயாரிக்கலாம்.
கொசு விரட்டி (Mosquito repellent)
முதலில், ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன்கடுகு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும். இதில், ஒரு ஸ்பூன் கெட்டி சாம்பிராணி பொடியை கலக்கவும். இரண்டு நிமிடம் சூடானதும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது ஒரு வெங்காயத்தை எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி சிறிய உரலில் போட்டு இடித்து கரடுமுரடாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் ஏற்கெனவே காய்ச்சிய கடுகு எண்ணெய்யை ஊற்றி, நன்கு கலந்து ஜன்னல் ஓரம், வீடு வாசல், வீட்டுக்குள் கொசு நுழையும் இடங்களில் வைக்கவும். இப்படி செய்தால், கொசு உங்கள் வீட்டுக்குள் வராது.
துளசி சாறு
துளசி சாறு வலுவான லார்விசைல் பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே தேங்கி நிற்கும் நீர்நிலைகள் மற்றும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பிற பகுதிகளில் செறிவூட்டப்பட்ட துளசி சாற்றை தெளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துளசி, லாவெண்டர், லெமன்கிராஸ், சாமந்தி மற்றும் புதினா போன்ற தாவரங்கள் பயனுள்ள கொசு விரட்டிகளாக செயல்படுகின்றன.
அதேபோல, எலுமிச்சை பழத்தை இரண்டாக வீட்டில் அதில் கிராம்புகளை குத்தி வீட்டின் மூலை முடுக்குகளில் வைக்கவும். இந்த மணம் கொசுக்களுக்கு அலர்ஜி என்பதால்' அவற்றை வராமல் தடுக்கும். பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தோலில் தடவுவது கொசுக் கடியை திறம்பட தடுக்கிறது.
- வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்தது
- சந்தன எண்ணெய்
- சிறிய அளவு மஞ்சள் பேஸ்ட்
- வேப்ப இலை விழுது
- துளசி இலை பேஸ்ட்
- வேப்ப எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் சம அளவு கலந்தது
- வேப்ப இலை, தேன் கலந்த பேஸ்ட், வேப்பம்பூ ஒரு நல்ல எதிர் மருந்து.
மேலும் படிக்க
எலித் தொல்லை தாங்க முடியலையா? இதை செஞ்சிப் பாருங்க எலியே வராது