
'டோபமைன்' என்பது மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கும் இது உதவுகிறது.
மியூசிக் தெரபி
ஐம்பது வயதிற்கு மேல் டோபமைன் சுரப்பு குறைந்தால், 'அல்சைமர்' எனப்படும் நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். 'மியூசிக் தெரபி (Music Therapy)' இதற்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. நம் பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன.
சித்திரை மாத பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில் இசையோடு இணைந்த விழாக்கள் கொண்டாடுவது பழந்தமிழர் கலாசாரம். அந்த நாளில், நரம்பியல் கோளாறுகள், மன நோயாளிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். நரம்பு செல்களைத் துாண்டி சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. அல்சைமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன. மூளையில் உள்ள நியூரான்களும் இறந்த செல்களை விலக்கி புதுப்பித்துக் கொள்ளும்.
ஆதாரம்: அப்பல்லோ மருத்துவமனை
மேலும் படிக்க