இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் உடலில் அதிகம் அசைவு இல்லாதது, ஒரே இடத்தில அசைவின்றி அமர்ந்திருப்பது, அதிக நேரம் நின்று கொண்டிருப்பது, நரம்பில் அழுத்தம், உடல் எடை அதிகமாவதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது, போன்ற காரணங்களால் வெரிகோஸ் வெயின் ஏற்படுகிறது.
இவை ஆண் பெண் இருவருக்குமே ஏற்பட கூடியது, ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.
வெரிகோஸ் காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நாள்பட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
இந்த எளிய முறைகளை செய்தாலே போதும் மருந்துகளையும், சிகிச்சைகளையும் முழுமையாக தவிர்த்து விடலாம்.
கடு எண்ணெய்
வெரிகோஸ் உள்ளவர்கள் தினமும் ஒரு கரண்டி கடு எண்ணெய்யை மிதமான சூட்டில் "வெரிகோஸ்" நரம்பு முடிச்சிட்டிருக்கும் இடங்களில் நன்கு தடவி வந்தால் நரம்புகள் சீராகி சரியான ரத்த ஓட்டம் பெற்று நரம்புகளின் தழும்புகள் மறைந்து விடும். மேலும் வீக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றையும் விரைவில் குணமாக்கி விடும்.
நடை பயிற்சி
வெரிகோஸ் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளில் காலை, மாலை ஒரு மணி நேரமாவது நன்கு நடக்க வேண்டும். இதனால் கால்கள் அசைவு பெற்று நரம்புகளை சீராக்கி நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்களில் வலி, வீக்கம், குறைந்து நரம்புகளும், கால்களும் பலம் பெறுகின்றன.
வேலை பார்ப்பவர்கள்
ஒரே இடத்தில் அமர்ந்து, நின்று வேலை பார்ப்பவர்கள் வேலை செய்யும் நேரத்தில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு கெண்டை கால்களுக்கும் அசைவு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அடிக்கடி கால்களில் வலி எடுப்பது, வீக்கமடைவது, ரத்த ஓட்டம் நிற்பது போன்ற பிரச்சனைகள் குறையும். முடிந்தால் சிறிது உடல் அசைவு மேற்கொள்வது நல்லது.
வெரிகோஸ் வெயின் இருப்பவர்கள் கால்களை கவனித்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் இம்முயற்சிகள் உங்களது மருந்துகளையும், சிகிச்சைகளையும் அறவே தவிர்த்து விடும்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN