நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 July, 2022 8:06 AM IST

அசைவப் ப்ரியர்களைப் பொறுத்தவரை, மட்டன், சிக்கன், கடல் உணவுகள் என அனைத்துமே விரும்பி உண்ணக்கூடியவை. ஆனால், அதிகம்பேரின் விருப்ப உணவாக சிக்கன் உள்ளது. அதேநேரத்தில் சுவையின் அடிப்படையில். ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலான அசைவப் ப்ரியர்கள் மட்டனையேத் தேர்வு செய்கின்றனர்.

விருப்பங்கள் வேறுபட்டு இருந்தாலும், நோய் வந்தபிறகு எதை உண்பது நல்லது என்பது நம் எல்லோருக்குமே எழும் கேள்விதானே.அந்த வகையில், நீரிழிவு நோயாளிகள் மட்டன், சிக்கன் சாப்பிடலாமா? எதை சாப்பிடுவதால் பிரச்சனை அதிகமாகும்? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் இன்று மக்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது. இந்த கோளாறில், இரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாக அதிகரிக்கிறது. உடல் இன்சுலின் ஹார்மோனை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாததால் இது ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் தேவை. நீரிழிவு நோயாளிகள் குறைந்தபட்சம் கார்போஹைட்ரேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் எந்த உணவை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்ற குழப்பம் எப்போதும் இருப்பதுண்டு.

மட்டன்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ள நோயாளிகள் சிவப்பு இறைச்சியின் நுகர்வை குறைக்க வேண்டும். ஏனெனில் அதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு இதய நோய்களை ஏற்படுத்தும்.
ஆடு மற்றும் ஆட்டுக்குட்டி இறைச்சியில்,இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின், தயாமின், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

சிறந்த தேர்வு

மட்டனில் உள்ள சோடியம் மற்றும் நைட்ரைட்டுகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றன. இது உடலில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். இது சில வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

இருப்பினும், ஆட்டிறைச்சி விஷயத்தில் இந்த அபாயங்கள் குறைவாக இருக்கலாம். ஆட்டு இறைச்சியில் அதிக சத்துக்கள் இருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் சோடியத்தை விட அதிக பொட்டாசியம் உள்ளது. எனவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

கிளைசெமிக் குறியீட்டு

ஆராய்ச்சியின் படி, கோழிக்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு உள்ளது. கோழிக்கறி சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று நம்பப்படுகிறது. கோழி இறைச்சியில் புரதம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் பி, ஏ மற்றும் டி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
அதேநேரத்தில், கோழி இறைச்சியில் மிகக் குறைந்த கொழுப்பு கொண்ட புரதச்சத்து அதிகம். கோழியை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட்டால், அது ஆரோக்கியமான உணவாக மாறும்.

மேலும் படிக்க...

பீர் ப்ரியர்களுக்கு நீரிழிவுநோய், இருதய நோய் வராது- ஆய்வில் கண்டுபிடிப்பு!

எங்கள் வீட்டில் யார் வேண்டுமானாலும் தங்கி சமைத்து சாப்பிடலாம்!

English Summary: Mutton Vs Chicken- Which is better for Diabetics?
Published on: 08 July 2022, 07:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now