கொய்யாப்பழத்தில் செய்யப்படும் இயற்கை பானம் தீராத மலச்சிக்கலுக்கு உதவும் நன்மருந்து பானம். பற்களுக்கு உறுதியைத் தரக்கூடிய பானம். வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடிய பானம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு மிகச் சிறந்த இயற்கை உணவாக விளங்கக் கூடிய இயற்கை பானம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தக் கூடிய அற்புதமான இயற்கை பானம்.
தேவையான பொருட்கள்
- கொய்யாப் பழம் - 100 கிராம்
- சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
- மிளகுத் தூள் - 3 சிட்டிகை
- ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை (Procedure)
முதலில் தேவையான அளவு கொய்யாப் பழத்தை எடுத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு கொய்யாப்பழத்தை புட்டுத் துருவல் கொண்டு துருவி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மத்தால் கடைந்து கொள்ளவும். அதனுடன் மிளகுத் தூள் , சீரகத் தூள், ஏலக்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து சுவையாக அருந்தவும்.
சாப்பிடும் முறை (Eating Method)
தயாரித்து வைத்துள்ள சாற்றை காலை மற்றும் மாலை என இரு வேளையும் குடித்து வரவும்.
- கோவை பாலா
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி (காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
தொடர்புக்கு : 96557 58609
வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆப்பிளை எப்பொழுது சாப்பிட வேண்டும்!