கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்க நோயாளிகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பொடி மருந்து, விற்பனைக்கு வந்தது. இதன் விலை ரூ.999.
கொலைகாரக் கொரோனா (The killer corona)
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. முதியவர்கள், இளம் வயதினர் என எந்தப் பாகுபாடும் இன்றி, இயன்ற அளவுக்கு தன் மரணப்பிடிக்கும் பலரையும் அற்ப ஆயுளில் அள்ளிச் சென்றது.
புதிய மருந்து (New medicine)
இந்நிலையில் கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், '2 - டிஜி' எனப்படும் கொரோனா சிகிச்சை மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
நல்ல பலன் (Good benefit)
கொரோனா வைரசால் மிதமான மற்றும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலன் அளிப்பது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தை தயாரிக்கும் டாக்டர் ரெட்டீஸ் லேபாரேட்டரீஸ் நிறுவனத்திற்கு, அவசரகாலப் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2 - டிஜி மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது.
இது குறித்து ரெட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
99.5% (5.2%)
எங்கள் நிறுவனத்தின் கொரோனா சிகிச்சை மருந்துகளில் புதிதாக, 2 - டிஜி மருந்து இணைந்துள்ளது. இது, 99.5 சதவீதம் துாய்மையானது.
ரூ.999 (Rs.999)
பொடி வடிவிலான இந்த மருந்து, ஒரு பாக்கெட் விலை, 999 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் (At subsidized prices)
அரசு நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். முதற்கட்டமாக அனைத்து பெருநகரம் மற்றும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரை அவசியம் (Recommendation is essential)
இதைத் தொடர்ந்து, நாடு முழுதும் மருந்து விற்பனை விரிவுபடுத்தப்படும். மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்தை விற்பனை செய்யக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரெட்டீஸ் நிறுவனம், ஏற்கனவே ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் வி' கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...