ஒமிக்ரான் வைரஸ் ஓயாது பரவி வரும் நிலையில், அடுத்து மிக மிக ஆபத்தான வைரஸ் வர உள்ளதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ரவீந்திர குப்தா எச்சரித்துள்ளார்.
ஒமிக்ரான் (Omicron)
கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே உலக நாடுகளை அலற வைத்துள்ள ஒமிக்ரான் வைரஸ், அமெரிக்காவை படுமோசமாகத் தாக்கியுள்ளது. வல்லரசான அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ள இந்த ஒமிக்ரான், இந்தியாவிலும் தன் ஆட்டத்தொடங்கி வேகமாகப் பரவிவருகிறது.
ஒமிக்ரான் வேகமாகப் பரவினாலும், கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும், மருத்துவமனை அனுமதியும், உயிரிப்பும் மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறியிருப்பது சற்று ஆறுதலை அளித்துள்ளது.
பயங்கரமானது (Terrible)
ஆனால், இந்த ஆறுதலைத் தவிடு பொடியாக்க வருகிறதாம் மிக மிக ஆபத்தான வைரஸ். 'ஒமைக்ரான்' வைரஸ் பாதிப்பு மிதமானதாக இருந்தாலும் அடுத்து வரப் போகும் வைரஸ் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்,'' .
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியராக பணியாற்றும் ரவீந்திர குப்தா, ஒமைக்ரான் வைரஸ் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தவறுகளேக் காரணம் (The reason for the mistakes)
அதில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும் பாதிப்பு மிதமாகவே உள்ளது. இதற்கு ஒமைக்ரான் 'செல்' அணுக்களின் சேர்க்கை மற்றும் உருவாக்கத்தில் நிகழ்ந்த தவறுகள்தான் காரணம்.
ஆய்வில் தகவல் (Information in the study)
ஆனால் கொரோனாவில் இருந்து அடுத்து உருவாக உள்ள வைரஸ் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் 'டெல்டா' வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. ஒமைக்ரான் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்பதால் 'பூஸ்டர் டோஸ்' அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...