அளவான உணவு ஆரோக்கியமான வாழ்வு. அந்த அளவு மீறினால் ஆபத்துதான். அதிகம் உண்பது, பசி அதிகம் எடுத்த பின்பு உண்பது, நேரம் கடந்து உண்பது, எண்ணெய் பலகாரங்கள், கடை தீனி, இறைச்சி உணவுகள் இவைகள் செரிமானப் பிரச்சனைக்கு விதி விலக்காக உள்ளன. நம்மில் பலர் செரிமானப் பிரச்சனையை கண்டு கவலை கொள்கிறோம். இதற்கு என்னதான் தீர்வு?
மாத்திரைகள் வேண்டாம், செரிமானப் பிரச்சனைக்கு வீட்டிலேயே சுலபமாக தீர்வு காணலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது
வெந்நீர்
தினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சால சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் உணவில் சீக்கிரமாக செரிமானம் ஏற்படுகிறது. மேலும் வயிறு இலகுத் தன்மையை அடையும், வயிறு உப்பசம் குறையும்.
ஓமம்
உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு ஓமத்தை மென்று சாதாரண நீர் அல்லது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சீராகும்.
இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜின்ஜரோல்ஸ் மற்றும் ஷொகோலஸ் என்னும் அமிலம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. தினந்தோறும் இஞ்சியை சிறு துண்டாகவும் உண்டு வரலாம் அல்லது இஞ்சி டீயாகவும் பருகலாம்.
எலும்மிச்சை சாறு
செரிமானப் பிரச்சனை, அஜீரண கோளாறு, வாயிற் உப்பசம், போன்ற சிரமங்களுக்கு எலும்மிச்சை சாறு சிறந்த மருந்தாகும். தினமும் மிதமான சுடு தண்ணீரில் எலும்மிச்சைசாறு சேர்த்து குடித்து வந்தால் வயிறு சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் ஏற்படாது.
பட்டை
பட்டையில் உள்ள மருத்துவ குணமானது செரிமானப் பாதையில் உள்ள கோளாறுகளை சரி செய்து ஜீரணத்தை சுலபமாக்குகிறது.
லவங்கம்
வயிறு உப்பசம், வயிறு இறுக்கம், வயிறு மந்தம் போன்ற உபாதைகளுக்கு லவங்கம் சிறந்து விளங்குகிறது. தினமும் ஒரு லவங்கத்தை வாயில் போட்டு உண்ணலாம் அல்லது ஒன்று, இரண்டு லவங்கத்தை நீரில் கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து குடித்து வர செரிமானம் சீராகும்.
சோம்பு
உணவு நன்கு ருசியாக இருந்தால் அளவுக்கு அதிகமாகவே உட்கொள்ள தோன்றும். அவ்வாறு அதிக உணவு சாப்பிட்டு விட்டால் ஒரு டீ ஸ்பூன் அளவு சோம்பை நன்கு மென்று விழுங்கினால் அஜீரணம் குறையும்.
செய்யக்கூடாதது
சாப்பிட்டதும் படுக்கக் கூடாது
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும், நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.
உடனே நடக்கக் கூடாது
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.
தேநீர் குடிக்கக் கூடாது
தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்த்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடுகிறது.
உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது
இது வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
K.Sakthipriya
Krishi Jagran