Health & Lifestyle

Wednesday, 05 January 2022 11:18 PM , by: Elavarse Sivakumar

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.35 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புப் பணிகள் (Preventive measures)

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனாப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஏதுவாக மெகாத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனாத் தடுப்பு மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன.

ரூ.35க்கு மாத்திரை (Tablets for Rs.35)

தீவிர கொரோனாப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. மாத்திரை என வரும்போது, அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய விலை விலையில் விற்பனை செய்யப்படுமா? என்ற கேள்வி இருந்தது.இந்நிலையில் இந்த மாத்திரையின் விலை 35 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

அடுத்த வாரம் (Next week)

மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். அதிகம் கொரோனாப் பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு முதற்கட்டாக இந்த மாத்திரைகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஒரு மாத்திரையின் விலை 35 ரூபாய் ஆகும். 5 நாட்கள் சிகிச்சைக்கு மொத்தம் 40 மாத்திரைகள் தேவைப்படும்.

ரூ.1,400 செலவு (Cost Rs.1,400)

40 மாத்திரைகளின் விலை 1,400 ரூபாய் ஆகும். இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தினசரி கொரோனா பாதிப்பு 2,700யைத் தாண்டியது- தமிழகத்தில் அமலுக்கு வருகிறது Lockdown ?

துணி மாஸ்க்கை முறையாகப் பராமரிக்காவிட்டால்- கொரோனா உறுதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)