“உருளைக்கிழங்கை எப்படி சரியாக சேமிப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால், அவை வாரங்கள் அல்ல மாதங்கள் வரை வாடாமல் இருக்கும் எப்படி என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறியாகும். ஆனால் உருளைக்கிழங்கை நீண்ட காலம் சேமித்து வைத்தால், அவை காய்ந்து, படிப்படியாக முளைக்கத் தொடங்கும்.
இனி, உருளைக்கிழங்கை நீண்ட நாள் சேமிக்க சில எளிய வழிமுறைகளை கையாண்டால் போதும் என்கிறார் செஃப் குணால் கபூர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
பொதுவாகவே, உருளைக்கிழங்கு மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை விட நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை. ஆனால் இறுதியில், அதில் பச்சை தளிர்கள் முளைக்க ஆரம்பித்துவிடும், அதன் புத்துணர்ச்சி மற்றும் சுவை மாறி விடுகிறது. அவற்றைச் சரியாகச் சேமிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், அவை வாரக்கணக்கில் அல்ல மாதங்கள் கூட வாடாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கை எப்படி வாங்குவது மற்றும் சேமிப்பது என்பது குறித்து, செஃப் பரிந்துரைக்கும் சில குறிப்புக்களை அறியலாம்.
-
உருளைக்கிழங்கை குளிர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
-
பிரிட்ஜ் போன்ற குளிர்ந்த வெப்பநிலை, உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதற்கு காரணமாகிறது, ஆகவே இதன் விளைவாக, உருளைக்கிழங்கு இனிப்பாகவும் சுவையளிக்கும்.
-
அதிக வெப்பநிலையை அடையும் அல்லது அதிக சூரிய ஒளி பெறும் பகுதிகளில் உருளைக்கிழங்குகளை வைப்பதை தவிர்ப்பது நல்லது. எப்போதும் குளிர்ந்த இருண்ட பகுதியில் வைப்பது நன்மைபயக்கும்.
-
துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதப் பைகளில் உருளைக் கிழங்கை வைப்பது அதன் ஆயுளை நீட்டிக்க சிறந்த வழியாகும்.
-
உருளைக்கிழங்கை சேமிப்பதற்கு முன் கழுவ வேண்டாம். அவ்வாறு கழுவினால், அதில் இருக்கும் ஈரப்பதம் ஆரம்பகால கெடுதலை ஊக்குவிக்கிறது.
-
சோலனைன் கசப்பான சுவையை உருவாக்குகிறது மற்றும் அதிக அளவில் சாப்பிட்டால் நோயை உண்டாக்கும் ஆபத்து கொண்டது.
-
சிறிதளவு பச்சையாக இருந்தால், சமைத்து சாப்பிடும் முன் உருளைக்கிழங்கின் தோலின் பச்சைப் பகுதிகளை வெட்டிவிடுவது நல்லது.
-
நீண்ட நாளுக்கு பிறகு உருளைக்கிழங்கில் முளைகள் வளர துவங்கும். உருளைக்கிழங்கை நன்கு காற்றோட்டமான, உலர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைப்பது முளைப்பதைத் தவிர்க்க உதவும்.
-
உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் அல்லது சாப்பிடுவதற்கு முன் முளைகள் இருந்தால் வெட்டிவிடுவது நல்லது.
மேலும் படிக்க: