இந்திய அரசு IYOM, 2023 ஐ ஒரு மக்கள் இயக்கமாக கொண்டாட முடிவு செய்துள்ளது, இதனால் இந்திய தினை, சமையல் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ள வாய்ப்பாக, இது அமையும். இதன் ஒரு பகுதியாக, இப்பதிவில் ஆங்கிலத்தில் Kodo Millet எனப்படும் வரகு வைத்து பாயசம் ரேசிபி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் - வரகு Kodo Millet
- 4 கப் - பால்
- தேவையான அளவு - நெய்
- 1/2 டெபிள் ஸ்பூன்- சாரைப் பருப்பு, பாதாம், பிஸ்தா மற்றும் காஜு
- தேவையான அளவு - சர்க்கரை
சத்தான மற்றும் சுவையான பாயசம் செய்ய தேவையான பொருட்கள் பார்த்தோம். அடுத்ததாக, செய்முறை விளக்கத்தை பார்ப்போம்.
செய்முறை:
- 4 கப் பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும். குறைந்த பட்சம் 3யிலிருந்து 4 நிமிடம் வேக வைக்கவும்.
- பின் ஒரு கடை அல்லது தாலிப்பு பாத்திரத்தில் 1யிலிருந்து ஒன்றரை ஸ்பூன் நெய் விட்டு, சுடாக்கவும்.
- சுடான நெய்யில், சாரைப் பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து, நல்ல பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
- அதன் பின்னர், மீண்டும் வானாலியில் நெய் சேர்த்து எடுத்து வைத்திருக்கும் அறை கப் வரகை அதில் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
- வரகினை 3 யிலிருந்து 4 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.
- பின் வரகை பால் உடன் சேர்த்து 10யிலிருந்து 12 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- நல்ல கொதி வந்த பிறகு, வறுத்து வைத்திருக்கும் சாரைப் பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி பருப்பினை பாலுடன் சேர்க்கவும்.
- பின்னர், 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- அதன் பின்னர் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் சேர்த்த பின்னர், 1 யிலிருந்து 2 நிமிடம் விட்டு இறக்கி, கொஞ்சம் குங்குமம் பூ சேர்த்து பரிமாறவும்.
- சுவையான மற்றும் சத்தான வரகு பாயசம் ரேடி.
சரி, ரேசிபி ஒகே ஆனால், இதில் இந்த சாரைப் பருப்பு என்றால் என்ன என்ற கேள்வி பலரின் மனதில் தோன்றியிருக்கலாம். அதற்கு பதில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
சாரைப் பருப்பு என்றால் என்ன? (Chronji, Charoli)
தென்னிந்தியாவில் பாயசம் என்பது பாராம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று, அனைவரும் அறிந்ததே. இதில் பாதாம், பிஸ்தா போன்றவைகளில் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. ஆனால் இதனுடன் குறிப்பாக சாரைப் பருப்பு அல்லது சிராலா என்ற ஒரு நட்ஸ் வகையும் சேர்க்கப்படுகிறது. பாயசம் உட்பட பல்வேறு அல்வாக்கள் போன்றவற்றிலும் இனிப்பு பதார்த்தங்களிலும் சாரைப் பருப்பு விதைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் பாதாம் பருப்புக்கு மாற்றாக சாரைப் பருப்பு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சாரைப் பருப்பில் கலோரிகள் குறைவாக உள்ளது. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இவ் விதைகளில் வைட்டமின் சி உட்பட பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் பி1 மற்றும் பி2 மற்றும் நியாசின் போன்றவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இதில் கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
ஜனவரி 15ந் தேதி முதல் 50gramக்கு மேல் உள்ள முட்டைகள் ஒரே விலையில் விற்பனை
5 மொழிகளில் தினை வகைகளின் பெயர்களை, இப் பதிவில் பார்க்கலாம்!