Health & Lifestyle

Saturday, 25 December 2021 03:33 PM , by: Elavarse Sivakumar

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று, 3-வது அலையைக் கொண்டு வரும் எனவும், இது பிப்ரவரி 3-ந் தேதி உச்சம் தொடும் என்றும் கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரான் (Omicron)

தென் ஆப்பிரிக்காவில் பரவத்தொடங்கிய உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று, தற்போது உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது.

கொரோனாவின் 2-வது அலையை முடிவுக்குக் கொண்டு வருவதில் முழுவீச்சில் போராடி வந்த இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று கடந்த 2-ந் தேதி நுழைந்து, 17 மாநிலங்களில் கால்தடம் பதித்துள்ளது.

1 மற்றும் 2-வது அலை (1st and 2nd wave)

ஒமிக்ரான் வைரஸ் தொற்று தொடர்பாக உலகமெங்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் காஸ்சியன் மிக்சர் மாடல் என்னும் புள்ளியல் சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வுக்கு இந்தியாவில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் தரவுகளை பயன்படுத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வு முடிவு (Study results)

உலகமெங்கும் நிலவுகிற போக்கைத்தொடர்ந்து, ஒமிக்ரான் தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவில் டிசம்பரில் தொடங்கும். பிப்ரவரி தொடக்கத்தில் (3-ந் தேதி) ஒமிக்ரான் உச்சம் தொடும் என்பதுதான்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ எங்கள் ஆரம்ப கண்காணிப்பு தேதியில் இருந்து (ஜனவரி, 30, 2020) 735 நாட்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு உச்சம் அடையும் என கணித்திருக்கறோம்” என குறிப்பிட்டனர்.

லேசான பாதிப்பு (Mild damage)

ஏற்கனவே தேசிய கோவிட்-19 சூப்பர்மாடல் கமிட்டி உறுப்பினர்களும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொற்று நோயின் 3-வது அலை வரும் என கணித்திருந்தனர். இந்த குழுவின் தலைவரான ஐதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் வித்யாசாகர், இந்தியாவில் தொற்றின் 3-வது அலை வரும், ஆனால் அது இரண்டாவது அலையைவிட லேசான பாதிப்பைத்தான் கொண்டிருக்கும் என்று கூறி உள்ளார்.

மேலும் படிக்க...

ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)