அன்னாசிப் பழத்தில் நிறைய நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஊட்டச்சத்து, நோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் செரிமானத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.
அன்னாசிப் பழம் சாப்பிடும் போது நாக்கு, உதடுகள் மற்றும் தொண்டையில் ஏற்படும் கூச்ச உணர்வு காரணமாக சிலர் இந்த பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால், பாரம்பரிய சீன மருத்துவத்தின் படி அன்னாசி, வயிறு மற்றும் சிறுநீரக செயல்பாடுகளுக்கு சிறந்தது. எனர்ஜி மற்றும் தாகத்திற்கு உகந்தது. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்கள் சி மற்றும் பி 6, மாங்கனீசு, பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளன.
ப்ரோமைலின்
அன்னாசியில் உள்ள ப்ரோமைலின் என்சைம் (enzyme) நாக்கு மற்றும் தொண்டையில் கூச்ச உணர்வு ஏற்பட காரணமாக உள்ளது. அதேநேரத்தில் இந்தப் ப்ரோமைலின் (Bromelain) பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் புரத-செரிமான என்சைம் (protein-digesting enzyme)ஆகும்.
புரதத்தை உடைக்க
அன்னாசிப் பழத்தின் சதையில் இருக்கும் ப்ரோமைலின் நாம் சாப்பிடும் போது புரதங்களை உடைக்கிறது. இது தசைகளில் வலி, கீல்வாதம், செரிமான கோளாறு, காயம் குணப்படுத்துதல், உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. ப்ரோமைலின் ரத்த அணுக்களை சரிசெய்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
உப்புத் தண்ணீரில்
உப்பு ப்ரோமைலின் தன்மையை செயலிழக்க செய்கிறது. சிறிதளவு உப்பில் பழம் சேர்ப்பது பழத்தின் இனிப்பை அதிகரிக்கிறது, சுவை கூட்டுகிறது என்றார்.
செய்முறை
-
முதலில் அன்னாசிப் பழத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
-
ஒரு பாத்திரம் எடுத்து 1-2 கப் தண்ணீர் சேர்த்து அதில் பழத்தை போடவும்.
-
பாத்திரத்தில் 1 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
-
1 நிமிடம் ஊறவைத்து எடுத்து சாப்பிடலாம்.
அன்னாசிப் பழத்தை உப்பு நீரில் ஊறவைத்து சாப்பிடுவது அலர்ஜி தன்மையை குறைக்கிறது. ப்ரோமைலின் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் மாதவிடாய் நேரங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கருப்பை தசைகளைப் பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிகள் ப்ரோமைலிளை தவிர்க்க வேண்டும்.
தகவல்
லில்லி சோய்
மருத்துவர், நியூயார்க்
மேலும் படிக்க...