மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளுக்கான கல்வி சலுகையான ரூ.4500 வரை பெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்தத் தொகையைப் பெற வேண்டுமானால், அரசு ஊழியர்கள் உடனடியாக இந்த வேலையை முடிக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்கள் கல்விப்படித் தொகை பெறுவதற்கு மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான சான்றுகளைச் சமர்ப்பித்தால், அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.4500 வீதம் கல்விப்படித் தொகை கிடைக்கும். எனவே அரசு ஊழியர்கள், குறித்த காலத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையைப் பெறுகின்றனர். எனினும், கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி படித் தொகையை (Children Education Allowance) பெற முடியாமல் இருந்தது. இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்விப் படித் தொகையை கிளைம் செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
எனவே கல்விப் படித் தொகைக்கு விண்ணப்பிக்கக் குழந்தையின் பள்ளி சான்றிதழை பெற வேண்டும். அதில், உங்கள் குழந்தை அந்தப் பள்ளியில் படிப்பதாக பள்ளி நிர்வாகம் சான்றிதழ் அளிக்க வேண்டும்.இதுபோக குழந்தையின் ரிப்போர்ட் கார்டு, கட்டண ரசீது ஆகிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.4,500 வரை
மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை கல்விப் படித் தொகை மாதம் 2250 ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகள் வரை மொத்தம் 4500 ரூபாய் வரை கல்விப்படித் தொகை பெறலாம். குழந்தைகளுக்கான கல்விப் படித் தொகையைப் பெறுவதற்கு வரும் 31ம் தேதி வரைக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வாய்ப்பு வழங்கப்படாது என்பதால்,
அரசு ஊழியர்கள், விதிக்கப்பட்டுள்ளக் காலக்கெடுவிற்குள், தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்தால் சம்பளத்துடன் கல்விப் படித் தொகையும் சேர்த்துக் கிடைக்கும்.
ஆவணங்கள்
குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற, மத்திய அரசு ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் குழந்தையின் ரிப்போர்ட் கார்டு, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.
ஒரு குழந்தைக்கு மாதம் 2250 ரூபாய் கிடைக்கும். அதாவது இரண்டு குழந்தைகளுக்கு மாதம் 4500 ரூபாய் பெறலாம். ஆனால், இரண்டாவது குழந்தை இரட்டையராக இருந்தால், முதல் குழந்தையுடன் இரட்டையர்களின் கல்விக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!