வெங்காயம் என்ற இந்த வார்த்தை, தந்தை பெரியார் அடிக்கடி உபயோகித்த வார்த்தை எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் அதன்அர்த்தம், உரித்தால் வெங்காயத்தில் எதுவுமில்லை என்பதுதான்.ஆனால் வெங்காயத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால், பன்மடங்கு நன்மைகள் நம்மை வந்தடைகின்றன.
வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன. இவை உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வேலை செய்கின்றன. வெங்காயம் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், சல்பர், புரதம் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் நல்ல மூலமாகவும் திகழ்கிறது.
சர்க்கரை (Sugar)
வெங்காயம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ஒரு ஆராய்ச்சியில், சிவப்பு வெங்காயத்தை உட்கொள்வதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவை உடலில் ஹைபோக்ளாய்சேமிக்கை உருவாக்குகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு நிரப்பியாக (டயட் சப்ளிமெண்டாக) செயல்படும்.
உடல் குளிர்ச்சி (Body cooling)
வெங்காயத்தின் குளிர்ச்சித் தன்மையால், கோடையில் இதை உட்கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது. கோடையில் உங்கள் உடல் வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்க வெங்காயம் மிகவும் உதவியாக இருக்கும்.
வெப்பத்தைத் தணிக்கும் (Relieve heat)
கோடையில் வெப்பத்தால் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். வெப்பத்தின் தாக்கம் பொதுவாக மக்களை கடுமையாக நோய்வாய்ப்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். வெங்காயத்தில் போதுமான அளவு திரவங்கள் உள்ளன. இது நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். அதே நேரத்தில் வெங்காயத்தை உட்கொள்வது உடல் வெப்பத்தையும் குறைக்கிறது.
புற்றுநோய் (Cancer)
வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற அல்லியம் காய்கறிகளை உட்கொள்வதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்கலாம். அல்லியம் காய்கறிகளை உட்கொள்பவர்கள் புற்றுநோயில் இருந்து விரைவாக மீண்டு வருவார்கள் என்று பப்மெட் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
இதயப் பாதுகாப்பு (Heart protection)
வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகின்றன. இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. மேலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?