Health & Lifestyle

Tuesday, 06 September 2022 10:35 AM , by: Elavarse Sivakumar

நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலேர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மிக கனமழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்யும்.

07.09.22

நீலகிரி, கோவை, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நாளை மிக கன மழை பெய்யும்.

கனமழை

ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

லட்சத்தீவு பகுதிகள், கேரள கடற்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)