ஒரு பொருளைப் பற்றிய உண்மையானத் தகவல்களை விட, தவறான விஷயங்களே மக்களால் பெரிதும் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், கெட்ட விஷயங்கள்தான் நம் மனதில் பதிந்துவிடுகின்றன.
திட்டமிட்ட சதி (Planned plot)
அந்த வகையில் நிலக்கடலை என்றவுடன் அதில் கொழுப்பு அதிகம் என்றே நம்மில் பலரும் நினைப்பார்கள். உண்மை அதுவல்ல. இதில் உள்ளது உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். நிலக்கடலை குறித்த வதந்திகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பி விடப்பட்டுள்ளன.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது (Suitable for pregnant women)
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது. இதுமட்டுமல்லாமல் குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
எலும்புத்துளை நோய் (Osteoporosis)
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப்பைக் கல் (Gallstones)
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
உடல் எடை (body weight)
நிலக்கடலை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் திகழ்கிறது.
என்றும் இளமைக்கு (For ever youth)
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.
மூளை வளர்ச்சிக்கு (For brain development)
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் (Dissolves bad fats)
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலில் உள்ளக் கெட்டக் கொழுப்பைக் கரைத்து, நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
ஒமேகா-3
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் இருப்பதாகக் கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
மேலும் படிக்க...