Health & Lifestyle

Wednesday, 16 March 2022 10:54 AM , by: Elavarse Sivakumar

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ரகசியம். அது நடைபயிற்சியானாலும், சரி, யோகாவானாலும் சரி, அத்தனைப் பயிற்சிகளுடனும், கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது அதிகப் பலனைக் கொடுக்கிறது.

அந்தவகையில், உடல் எடையை அதாவதுக் கெட்டக்கொழுப்பைக் கரைத்து ஸ்லிம்மாக வேண்டும் என எண்ணுபவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பருப்புகளில் கடலைப்பருப்பு முக்கியமானது. எந்தப் பொரியல் தாளிப்பிலும் இதனைப் போடுவார்கள். இது உணவுக்குத் தனிச்சுவையைத் தருவதோடு மட்டுமல்லாமல், நம் உடலுக்குத் தேவையானப் புரதச் சத்துக்களையும் வாரி வழங்குகிறது. கடலை பருப்பில் காணப்படும் புரதச் சத்து செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம்.

பூமிக்கு மேலே விளையும் பருப்பு வகைகளில் ஒன்றான கடலைப்பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதேபோல் கடலைப்பருப்பை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கீழ்கண்ட பல நற்பலன்களை நாம் பெற முடியும்.

நன்மைகள்

  • கடலை மாவு தோல் சம்மந்தமான பிரச்சனைக்ளுக்கு தீர்வு தருகிறது.

  • குறிப்பாக, தோலில் சுருக்கம், சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை கொண்டவையாக இவை உள்ளன.

  • கடலை பருப்பில் காணப்படும் புரதச் சத்து செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம்.

  • எனவே, இவற்றை குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

  • நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதிலும், நரம்புகள் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் ஓர் உணவுப்பொருளாகவும் கடலைப்பருப்பு உள்ளது.

  • உடல் எடை பெருக்கவும், நல்ல செரிமானத்திற்கும் கடலை பருப்பு உதவுகிறது.

  • முளை கட்டிய கடலைப்பருப்பை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

  • இப்படி ஏராளமான ஆரோக்கிய பயன்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள கடலைப்பருப்பில் எப்படி சுவையான மற்றும் சத்தான சுண்டல் தயார் செய்து சாப்பிடலாம். 

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)