அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல், எதுவானாலும் அளவோடு சாப்பிடுவதே நல்லது. குறிப்பாகக் கோடை காலத்தில், சில மசாலாப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்வது, ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கும்.
காய்கறிகளின் சுவையை அதிகரிப்பதில் மசாலாப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், அனைத்து பருவங்களிலும் மசாலாப் பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதையே செய்யும் என்று சொல்ல முடியாது. சில மசாலாப் பொருட்களை கோடையில் சாப்பிடுவது நல்லதல்ல.
குறிபிட்ட சில மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
துளசி
கோடையில், துளசியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள். துளசியை அதிகமாக உட்கொண்டால், அது பெண்களின் கருவுறுதலையும் பாதிக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை பலவித நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும் அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் வாயில் கொப்புளங்கள் ஏற்படலாம். மேலும், இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும்.
மஞ்சள்
மஞ்சள் மனித உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மஞ்சளை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அந்த காலங்களில் மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்தினால், அதிக இரத்தப்போக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க...