பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 September, 2021 4:16 PM IST
People with migraines should not eat these 7 foods!

ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன, இந்த ஒற்றை பக்கத் தலை வலி சில நேரங்களில் குமட்டல், தலைசுற்றல், ஒளி மற்றும் ஒலி விஷயங்களில் ஒவ்வாமை ஏற்படலாம். நீங்கள் நீண்ட காலமாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தால், சில உணவுகள் இந்த வகை தலை வழியை அதிகப்படுத்தும்.

டாக்டர் விக்ரம் சர்மா, மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் ஒற்றைத் தலைவலி என்பது நரம்பியல் நிலை என வகைப்படுத்தப்படும் ஒரு வகை தலைவலி, மிதமான முதல் கடுமையான தீவிரத்தன்மையுடன் தொடர்புடைய நரம்பியல் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

தலைவலி ஏற்படுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பே ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் ஆரம்பிக்கலாம் என்று அவர் கூறுகிறார், இது 'ப்ரோட்ரோம்' நிலை என்று அழைக்கப்படுகிறது, இதில் உணவு பசி, சோர்வு, மனச்சோர்வு, எரிச்சல் அல்லது கழுத்து விறைப்பு ஆகியவை அடங்கும். ஒற்றைத் தலைவலி  பொதுவாக தலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும், இதில் குமட்டல் அல்லது வாந்தி, அல்லது ஒளி  (போட்டோபோபியா) மற்றும் ஒலி (ஃபோனோபோபியா) போன்ற விஷயங்களையும் சேர்ந்து கொள்ளலாம்.

ஆனால் வலி ஏற்படும் பொழுது நீங்கள் சோர்வாக இருப்பீர்கள், சில உணவுகளைத் தவிர்ப்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும். வழியை தூண்டக்கூடிய சில உணவுகளின் பட்டியல் இங்கே.

சாக்லேட்டுகள்:

டாக்டர் சர்மாவின் கருத்துப்படி, சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலி தாக்குதல்களுக்கு மிகவும் பொதுவான தூண்டுதலாகும். அமெரிக்கன் மைக்ரேன் அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கும் 22 சதவிகித மக்களை பாதிக்கலாம்.

காஃபின்:

அதிகப்படியான காஃபின் உட்கொள்வது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். சாக்லேட், காபி, டீயில் அதிக அளவு காஃபின் உள்ளது, ஆனால் ஒரு சிறிய அளவு எடுத்துக்கொள்வது நம்மை பாதிக்காது.

சீஸ்:

ஒரு ஆய்வின்படி, ஒற்றைத் தலைவலியுடன் பங்கேற்பாளர்களில் 35% க்கும் அதிகமானோர் ஆல்கஹால் பொதுவான தூண்டுதல்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளனர்.

அஸ்பார்டேம் (செயற்கை சர்க்கரை):

பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை இனிப்புகள் மற்றும் அஸ்பார்டேம் நிரம்பியிருக்கும், குறிப்பாக, இதனால் அதிக ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

மோனோ சோடியம் குளுட்டமேட் (MSG) கொண்ட உணவுகள்:

MSG என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? இது குளுட்டமிக் அமிலத்தின் சோடியம் உப்பு மற்றும் இது சில உணவுகளில் சேர்க்கையாகவும் உள்ளது. அமெரிக்கன் மைக்ரேன் அறக்கட்டளையின் படி, MSG கடுமையான ஒற்றைத் தலைவலி அத்தியாயங்களைத் தூண்டலாம்.

நாள்பட்ட சீஸ் அல்லது டைரமைன்:

டைரமைன் ஒரு தூண்டுதலாகவும் செயல்படலாம், இது புளித்த அல்லது நாள்பட்ட உணவுகளில் காணப்படும், நாள்பட்ட சீஸ் மற்றும் சோயா சாஸ் போன்றவற்றில் காணப்படுகிறது.

மேலும் படிக்க...

எந்த வகை தலைவலியால் நீங்கள் அவஸ்தைப்படுகிறீர்கள் ? அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

English Summary: People with migraines should not eat these 7 foods!
Published on: 27 September 2021, 04:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now