இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 September, 2020 8:14 AM IST

கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், உதகையில் உள்ள நீலகிரி எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Pocket Sanitizer cum Face Mask Sprayவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா அரக்கனிடம் இருந்து தப்பிப்பதற்காகத் தேடித்தேடி Face Mask வாங்கும் மக்கள் ஒருபுறம், 100க்கு 90 சதவீதம் பேரைத் தாக்குவது எனக் குறிவைத்து பதம்பார்க்கும் நோய் மற்றொரு புறம்.இவர்களுக்கு இடையே பாதுகாப்பு கவசங்களை விற்பனை லாபம் பார்க்கும் நிறுவன இன்னொரு புறம்.

ஆனால் சற்று வித்தியாசமாக சிந்தித்திருக்கிறது உதகையில் உள்ள ஒரு நீலகிரி எண்ணெய் தயாரிப்பு நிறுவனம். மிகவும் பிரபலமான இந்த நிறுவனம், யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கும் விவசாயிகள் பலனடைய ஏதுவாக யூகலிப்டஸ் எண்ணெயைக் கொண்டு, Face Mask Spray cum Hand Sanitizerயைத் தயாரித்துள்ளது.

Credit : Healthline

சிறப்பு அம்சங்கள்

  • முழுக்க முழுக்க யூகலிப்டஸ் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சானிடைசர் சட்டைப் பாக்கெட்டில் எடுத்துச்செல்லும் வகையில், சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இந்த சானிடைசர் 0% ஆல்கஹால், 5% கிளிசரின் (glycerine)10% நீலகிரி எண்ணெய் ஆகியவற்றை உள்ளடக்கியது.

  • இதனைப் பயன்படுத்துவதால், இயற்கையாகவே நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கப்படுகிறது.

  • சளி, இருமல் போன்றத் தொல்லைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.

  • யூகலிப்டஸில் இருந்து தயாரிக்கப்படும் நீலகிரி எண்ணெய் தலைவலி தைலம் உள்ளிட்ட மருந்துப்பொருட்களைத் தயாரிப்பதற்கும், வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. இதைத்தவிர சேரடியாக யூகலிப்டஸ் இலை மருந்தாகப் பயன்படுகிறது.

  • இதனை ஒரேநேரத்தில் கைகளுக்கு சானிடைசராகவும் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் நாம் பயன்படுத்தும் Face Maskகிற்கு Spreyயாகவும் பயன்படுத்திப் பயனடையலாம்.

  • இதன்மூலம் இந்தத் தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரம் யூகலிப்டஸ் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்ற உதவுவதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்றகு 150 டன் நீலகிரி எண்ணெய் அதாவது 225 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!

சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!

English Summary: Pocket Sanitizer cum Face Mask Spray - The first product in the country!
Published on: 17 September 2020, 08:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now