Health & Lifestyle

Friday, 29 April 2022 10:42 AM , by: Elavarse Sivakumar

செடிகளைப் பார்க்கும்போது நமக்குள் ஒரு புத்துணர்ச்சி எழுவது வழக்கம். அதிலும் அவற்றின் அன்றாட வளர்ச்சி, நமக்கு, ஒருவித உத்வேகத்தை ஏற்படும். இதனால் நம் மனது எப்போதுமே, பாஸிட்டிவ்வாகவே நினைக்கும். அதனால்தான் வீடுகளில் செடிகளை வளர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஏனெனில், வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே அத்தகையச் செடிகளில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். இந்தச் செடிகள் உங்கள் வீடுகளில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கருவேலச் செடி

கருவேல மரத்தை வீட்டின் அருகில் அல்லது அருகில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் இது அசுபமாக கருதப்படுகிறது. இந்த மரம் இருந்தால், வீட்டில் சந்தோஷம் இருக்காது என்பதோடு தரித்திரமும் ஏற்படலாம்.

பருத்தி

வீட்டில் பருத்தி அல்லது பட்டு பருத்தி செடிகளை நடக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி, வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தையும் வறுமையையும் கொண்டு வருகிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மருதாணி

மருதாணிச் செடியில், தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடி வீட்டிற்கு அருகில் இருந்தால், வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

புளி

புளியஞ்செடியை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது. வீட்டைச் சுற்றி புளிச் செடியை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தில் நல்லதாக கருதப்படுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.

காய்ந்தச் செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி காய்ந்த செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது. வீட்டில் நடப்பட்ட செடி காய்ந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும், ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை கடத்துகின்றன. அதனால் வாழ்க்கையில் துன்பங்களும் பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க...

மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை அதிகரிக்கும் Brisk Walk!

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)