Health & Lifestyle

Friday, 02 July 2021 11:07 PM , by: Elavarse Sivakumar

Credit: BBC

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

இந்தியாவை கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோனா வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலும் தற்போதைய கொரோனா வைரஸின் 2-வது அலை, மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்பயம் (Fear of life)

இதனால், மக்களிடையே இந்தக் கொடிய வைரஸ் தொற்று குறித்த அச்சமும், உயிர்பயமும் அதிகரித்துள்ளது. கொரோனா என்று அச்சப்பட்ட நிலை மாறி, அய்யய்யோ, அதில் இருந்து உயிர் பிழைத்தால் போதும் என்ற இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கைகள் (Preventive measures)

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனுமதி இல்லை (Not allowed)

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படாமல் இருந்தது.

ஆய்வுகள் (Studies)

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, மக்களிடையே குழப்பம் ஒருபுறமும், எதிர்கால சந்ததி இந்தக் கொடிய நோயில் இருந்துக் காப்பாற்றி, நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள சந்ததியாக மாற்றுவது எப்படி என்ற குழப்பம் மறுபுறமும் இருந்து வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி (immunity)

இந்நிலையில், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளது.

தடுப்பூசி போடும் பணி (Vaccination work)

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதாரத்துறை (Department of Health)

கர்ப்பிணிப் பெண்கள், வலைத்தளத்தில் பதிவு செய்தோ அல்லது அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு நேரடியாகச் சென்றோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிரடி மாற்றம் (Action change)

கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான கவுன்சிலிங் கிட் மற்றும் பொதுமக்களுக்கான தகவல் கையேடு ஆகியவை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. இது தடுப்பூசி திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)