மதுரை மின் பகிர்மான வட்டம், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மக்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா எச்சரித்துள்ளார்.
பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பி அருகில் செல்வதை தவிர்த்து அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, அலைபேசி பயன்படுத்த கூடாது. ஈரமான கைகளுடன் சுவிட்ச், பிளக்குகளை, மின்மாற்றி, மின்கம்பங்களை தொடவோ, மின் கம்பம், இழுவை கம்பிகளில் கால்நடைகள் மற்றும் கயிறு கட்டி துணி காய வைக்கவோகூடாது.
பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக் பயன்படுத்தவும்.மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்க கூடாது. மின் கம்பிகளுக்கு அருகில் போதுமான இடைவெளி விட்டு கட்டடம் கட்ட வேண்டும். மின் பாதைகளுக்கு அருகில் கேபிள், தொலைபேசி வயர்கள் கொண்டு செல்வது, கனரக வாகனங்களை இயக்குவது கூடாது.
புகார்களை 98987 94987 அலைபேசியில் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க
மின்னல் வேகத்தில் மழை நீர் வடியும் வழிமுறை என்ன?
பேருந்தில் சத்தமாக பாட்டு கேட்டால் புதிய தண்டனை! உயர்நீதிமன்றம் அதிரடி