மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 August, 2021 8:03 PM IST
Eye Protection

இன்றைய சூழலில் கண் நலனை பாதிக்கும் இரண்டு முக்கிய விஷயங்களாக வெப்பமும், மின்னணுப் பொருட்களும் உள்ளன. அதிக வெப்பம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு அளவுகளின் குறியீடும் அதிகமாகவே உள்ளது. குறைந்த கால அளவிற்கு கூட தொடர்ந்து புற ஊதா கதிர் வீச்சுக்கு ஆட்படுவது கண்புரை, இமை முனைத்திசு வளர்ச்சி மற்றும் விழிப்புள்ளி சிதைவு ஆகியவற்றுக்கு நீண்டகால அளவிற்கு பாதிக்கக்கூடிய கண் பிரசனையை விளைவிக்கக் கூடும்.

புற ஊதாக் கதிர்கள்

புற ஊதாக் கதிர்கள் வெளிப்படுவதனால் ஏற்படுகிற கண்நோய் மற்றும் பாதிப்பு நிலைகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடங்கும். கண் புரைநோய் (கேட்டராக்ட்) என்பது கண்ணின் லென்ஸின் ஒளிபுகா இயல்பாகும். இது வழக்கமாக வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படுகிறது. இதில் இயற்கையான கண் லென்ஸ்கள் மங்கலாக / மந்தாரமாக இருப்பதே இதன் தன்மையாகும்.

புற ஊதா வெளிச்சத்திற்கு குறிப்பாக UV-B கதிர்களுக்கு வெளிப்படுவது வயது முதிர்வடைவதற்கு முன்பே இள வயதிலேயே கண் புரை நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும். இமை முனைத்திசு வளர்ச்சி (Pterygium) என்பது புற்றுநோய் (Cancer) அல்லாத இளஞ்சிவப்பு நிறத்தில் சதை வளர்ச்சியை உருவாக்கும் நிலையாகும். கண்விழிப்படலத்தில் தோன்றும். இது கருவிழி முழுவதிலும் மெதுவாக வளர்ச்சியடைகிறது.

இவ்வளர்ச்சியை அதிகரித்து உருச் சிதைந்த பார்வைத் திறனுக்கு வழிவகுக்கும். விழிப்புள்ளி சிதைவு என்பது காலப்போக்கில் விழித் திரையை சேதப்படுத்துகிற ஒரு பாதிப்பு நிலையாகும். கூர்மையான மையப் பார்வைக்கு அவசியமாக இருக்கிற விழித்திரையின் மையப் பகுதியான விழிப்புள்ளியை பாதிக்கும் இது முதிர்ந்த வயதில் நிகழ்கிறது. குறைந்த அல்லது நீண்டநேர கால அளவிற்கு புற ஊதாக் கதிர்வீச்சுக்கு நீடித்த அளவு வெளிப்படுவது ஒரு அல்லது இரு கண்களிலும் பார்வைத்திறன் இழப்பிற்கு வழிவகுக்கக்கூடிய நிலையை உருவாக்கும் இடரை அதிகரிக்கிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

கண்கள் சிவத்தல், நீர் வடிதல், மங்கலான பார்வை ஆகியவற்றை விளைவிக்கும் ஒரு வலி நிறைந்த இப்பாதிப்பு நிலையானது கருவிழியின் மென்மையான மேற்பரப்பை பாதிக்கிறது. தற்காலிக பிரச்னையான இது சிகிச்சையளிக்கப்படும் போது 2-3 நாட்களுக்குள் படிப்படியாக குறைந்துவிடும்.

சூரியக் கதிர்களிலிருந்து கண்களை பாதுகாப்பது, வெளியிடங்களில் இருக்கும்போது புற ஊதாக் கதிர்களை தடுக்கின்ற குளிர் கண்ணாடிகளை அணிய வேண்டும். புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் திறனற்ற கருப்பு நிற கண் கண்ணாடிகளை அணிவது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். புறஊதாக் கதிர்கள் அதிகளவில் கண்களுக்குள் நுழையவும், அதிக சேதத்தை விளைவிக்கவும் அனுமதிக்கும்.

ஆலோசனைக் குறிப்புகள்

அதிக பிரகாசமான வெளிச்சத்தில் அல்லது மிக மங்கலான வெளிச்சத்தில் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்களைப் பயன்படுத்துவதையும் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்த இரு செயல்பாடுகளுமே கண்கள் மீது மிகைப்பட்ட அழுத்தத்தை ஏற்படுத்தும். உகந்த வெளிச்சம் உள்ள இடத்தில் மட்டுமே இவைகளைப் பயன்படுத்த வேண்டும்.

விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும் போது குழந்தைகள் மற்றும் இள வயது நபர்கள், செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனெனில், இது அவர்களது பார்வைத்திறனை பாதிக்கக்கூடும்.

தங்களது மொபைல் போன்களில் அதிக நேரம் செலவிடுகிற குழந்தைகள் மற்றும் இளவயது நபர்களுக்கு உலர்ந்த கண்கள் பிரச்னையின் அதிக அறிகுறிகள் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே மொபைல் போன்கள், வீடியோ கேம்கள் மற்றும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் மிக அதிகமான நேரத்தை செலவிடாமல் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்!

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனின் டிஸ்பிளே வெளிச்ச நிலையானது சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இருட்டான அறையில் அளவுக்கு அதிகமான வெளிச்சத்தில் டிஸ்பிளே இருப்பது கண் அழுத்தத்தை உருவாக்கும்.

அடிக்கடி கண் சிமிட்டுவது (மூடி திறப்பது) கண்களில் ஈரப்பதம் இருக்குமாறு செய்யும்; கண்கள் உலர்ந்து விடாமல் இது தடுக்கும்.

20-20-20 விதி என்ற கண் உடற்பயிற்சியை பின்பற்றவும். இது மிகவும் எளிதானது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 வினாடிகள் கால அளவிற்கு 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை கூர்ந்து கவனிக்கவும். இது கண் தசைகளை தளர்வாக்கும் மற்றும் அவைகளுக்கு ஓய்வினை வழங்கும்.

எந்த நேரத்தில் சூரிய கதிர்கள் ஆபத்தானவை?

புற ஊதாக் கதிர்வீச்சின் உயர் ஆபத்து வகையின் கால அளவு என்பது பகலில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை என்று பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மிக உயர்வான ஆபத்து கால அளவு என்பது காலை 11 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை என அறியப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆபத்தானது நண்பகல் 12 மணியிலிருந்து, பிற்பகல் 3 மணி வரை அளவுக்கு அதிகமான தீவிர ஆபத்து விளைவிக்கும் நேரம் என அறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் கண்புரை பாதிப்புள்ள சுமார் 12 முதல் 15 மில்லியன் நபர்கள் பார்வைத்திறனை இழக்கின்றனர். சூரியக் கதிர்களுக்கு வெளிப்படுவதனால் 20% வரை பார்வைத் திறனிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள இன்டெர்வெல் டிரைனிங்!

தண்ணீர் பாலில் மூன்று மடங்கு சத்து: அவசியம் அறிவோம்!

English Summary: Protect your eyes from radiation!
Published on: 17 August 2021, 08:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now